ஓசூர் ஜூஜூவாடி
துவக்கப்பள்ளியில்
கலைத்திருவிழா
2026 - 2027.
இளையோர் திறன் போட்டிகள்
250-க்கும் மேற்பட்ட
மாணவ, மாணவிகள் பங்கேற்பு –
40 ஆசிரியர்கள்
நடுவர்களாக பங்கேற்பு
ஓசூர். ஆகஸ்ட். 19. -
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட
ஜூஜூவாடி
மாநகராட்சி தொடக்கப்பள்ளியில்,
பள்ளிக்கல்வித்துறை சார்பில்
குறுவளமைய அளவிலான
கலைத்திருவிழா போட்டிகள்
திருவிழா போல் உற்சாகமாக
நடைபெற்றன.
பள்ளிக்கல்வித்துறை சார்பில்
ஆண்டுதோறும் மாணவர்களின்
தனித்திறன்களை வெளிக்கொண்டு
வரும் வகையில்
கலைத்திருவிழா போட்டிகள்
நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, நடப்பு கல்வியாண்டான
2026–27ஆம் ஆண்டில்
1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும்
மாணவர்களுக்கு, வகுப்பு வாரியாக
பல்வேறு பிரிவுகளில் போட்டிகள்
நடத்தப்பட்டு வருகின்றன.
முதற்கட்டமாக
ஆகஸ்ட் 3 முதல் 14ஆம் தேதி வரை
பள்ளி அளவிலான போட்டிகள்
அந்தந்த பள்ளிகளில் நடைபெற்றன.
இதில் முதலிடம் பெற்ற
மாணவ, மாணவிகள்
குறுவளமைய அளவிலான
போட்டிகளில் பங்கேற்றனர்.
ஜூஜூவாடி குறுவளமையத்தில்
நடைபெற்ற போட்டிகளில்
1 முதல் 5ஆம் வகுப்பு
வரையிலான மாணவர்களுக்கு
தமிழ் பேச்சுப்போட்டி
ஆங்கில பேச்சுப்போட்டி,
மாறுவேடப்போட்டி,
தனிநபர் நடிப்பு,
ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல்,
களிமண் வேலைப்பாடு,
பரதநாட்டியம்,
நாட்டுப்புற நடனம்
உள்ளிட்ட பல்வேறு போட்டிகள்
நடைபெற்றன.
இந்த கலைத்திருவிழா போட்டிகளில்
பேடரப்பள்ளி,
முக்கண்டப்பள்ளி,
அரசனட்டி,
பேகேப்பள்ளி,
கோவிந்த அக்ரஹாரம்,
சின்ன எலசகிரி,
மொத்தம் அக்ரஹாரம்,
சாந்தபுரம்,
பெத்த எலசகிரி,
கொத்தூர்,
கொத்தகண்டப்பள்ளி,
பொம்மண்டப்பள்ளி
உள்ளிட்ட 13 பள்ளிகளைச் சேர்ந்த
250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்
ஆர்வத்துடன் கலந்து கொண்டு
தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
மாணவர்களின் திறமைகளை
மதிப்பீடு செய்து
முதல் மூன்று இடங்களைத்
தேர்வு செய்வதற்காக
சுமார் 40 ஆசிரியர்கள்
நடுவர்களாக பங்கேற்றனர்.
போட்டிகள் முழுவதும் மாணவர்களின்
கலைத்திறனை வெளிப்படுத்தும்
வகையில் சிறப்பாக நடைபெற்றன.
இந்நிகழ்ச்சிக்கு
ஓசூர் வட்டார வளமைய
ஆசிரியர் பயிற்றுநர்
திருமதி காயத்ரி
தலைமை வகித்தார்..
சிறப்பு விருந்தினர்களாக
ஜூஜூவாடி கவுன்சிலர்
திரு. அசோகா.
மற்றும் பெற்றோர் ஆசிரியர்
கழகத் தலைவர்
திரு. ராஜசேகர்
ஆகியோர் கலந்து கொண்டு
மாணவர்களை வாழ்த்தினர்.
மேலும்,
தலைமை ஆசிரியர்கள்
திரு. பொன்நாகேஷ்,
திரு. பிரகாஷ்,
திரு. அப்பையப்பா,
திரு. சீனிவாச மூர்த்தி,
திரு. தாமோதரன்,
திரு. போஜி,
திரு. பாபுகுமார்,
திருமதி. ராஜேஸ்வரி
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலைத்திருவிழாவில் பங்கேற்ற
250-க்கும் மேற்பட்ட
மாணவ, மாணவிகளுக்கும்
பாராட்டு சான்றிதழ்கள்
வழங்கப்பட்டன.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்
ஜூஜூவாடி மாநகராட்சி தொடக்கப்பள்ளி
தலைமை ஆசிரியர்
சிறப்பாக செய்திருந்தார்.
போட்டிகளில் நடுவர்களால்
தேர்வு செய்யப்பட்ட முதல் இடம் பெற்ற
மாணவ, மாணவிகள்
அடுத்த மாதம் நடைபெற உள்ள
ஒன்றிய அளவிலான
கலைத்திருவிழா போட்டிகளில்
கலந்து கொண்டு தங்களது திறமைகளை
வெளிப்படுத்த உள்ளனர்.
மாணவர்களின் கல்வித் திறனுடன்
கலை, பண்பாடு மற்றும் படைப்பாற்றலையும் வளர்க்கும் வகையில்
நடைபெற்ற இந்த கலைத்திருவிழா,
ஜூஜூவாடி பகுதியில்
ஒரு கல்வி விழாவாக மட்டுமின்றி,
மாணவர்களின் திறமைகளை கொண்டாடும் திருவிழாவாகவும் அமைந்தது.
இந்த கலைத்திருவிழாவில்
ஆசிரியர்கள், பெற்றோர்
கலந்து கொண்டனர்.
----------------------------------------------------------.