கிருஷ்ணகிரி மாவட்டம்
வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம்
வேளாண் இயந்திரங்கள் மற்றும்
கருவிகள் மானியத்தில் பெற விருப்பமுள்ள
விவசாயிகள் விண்ணப்பித்து
பயனடையலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச. தினேஷ் குமார், இ.ஆ.ப,
அவர்கள் தகவல்
கிருஷ்ணகிரி. செப். 10. –
வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம்
வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள்
மானியத்தில் பெற விருப்பமுள்ள
விவசாயிகள் விண்ணப்பித்து
பயனடையலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச. தினேஷ் குமார், இ.ஆ.ப,
அவர்கள் தெரிவத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது,
வேளாண் பணியாளர்களின் பற்றாக்குறையை நிவர்த்திசெய்யவும் வேளாண் இயந்திர சக்தியின் அளவை அதிகரிக்கவும்,
வேளாண் பணிகளை குறைந்த செலவில் உரிய காலத்தில் மேற்கொள்ளவும்,
வேளாண் உற்பத்தியை பெருக்கி விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும்,
நவீன மற்றும் உயர் தொழில்நுட்ப வேளாண் இயந்திரங்கள் மற்றும்
கருவிகள் பிரபல படுத்தவும்
வேளாண் இயந்திரமாக திட்டம் வேளாண்மை பொறியியல் துறையால் பெருமளவில் செயல் படுத்தப்படுகிறது.
விவசாயிகள் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கவும்,
இயந்திர வாடகை மையங்கள் அமைக்கவும் மானியம் வழங்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டுக்கான (2026-27)
வேளாண் நிதி நிலை அறிக்கையில்,
மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களால்
அறிவித்தவாறு தனிப்பட்ட விவசாயிகளுக்கு
மானிய விலையில்
டிராக்டர்,
பவர் டில்லர்.
பவர் வீடர்
ரோட்டவேட்டர்,
பல்வகை தானிய கதிரடிக்கும் இயந்திரம்,
ட்ரைலர் புதர் வெட்டும் கருவி,
தூண் குழி தோண்டும் கருவி.
கல் சேகரிக்கும் கருவி
தீவன புல் நறுக்கும் இயந்திரம்
ஆகிய கருவிகள் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
இதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு
543 எண்கள் இயந்திரங்கள் மற்றும் கருவிகள், ரூ.60267 லட்சம் மானிய தொகையாக ஒதுக்கப்பட்டுள்ளது.
வேளாண் இயந்திரங்கள்
மானிய விலையில் பெற
தனிப்பட்ட விவசாயிகள்
இயந்திரத்தின் மொத்த விலையில்
50 சதவிகிதம் மானியம்
சிறு, குறு, ஆதி திராவிடர் பழங்குடியினர்
மற்றும் பெண் விவசாயிகளுக்கு
வழங்கப்பட்டு வருகிறது.
இதர விவசாயிகளுக்கு
அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட
அதிகபட்ச விலை அல்லது மொத்த விலையில்
40 சதவிகிதம் இவற்றில் எது குறைவோ
அத்தொகை மானியமாக
வழங்கப்பட்டு வருகிறது.
மேலும்,
இத்திட்டத்தில் ஆதி திராவிடர், பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு அவர்களின் பங்களிப்புத் தொகையினை குறைத்து உதவிடும் வகையில் நடைமுறையில் உள்ள மானியத்துடன் 20 சதவித கூடுதல் மானியமும்,
பொது பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு நடைமுறையில் உள்ள மானியத்துடன் 10 சதவீத கூடுதல் மானியம்
பவர் வீடர்,
நெல் நாற்று நடவு இயந்திரம்
தட்டு வெட்டும் இயந்திரம்
ஆகிய கருவிகளுக்கு மட்டும்
வழங்கப்படுகிறது.
விவசாயிகள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் பெறுவதற்கு
முதலில் தாங்கள் கைபேசியிலுள்ள
கூகுளை பிலேஸ்டோரிலிருந்து
உழவர் செயலி (உழவர் App)- யை
பதிவிறக்கம் செய்து,
"ஒருமுறை பதிவு
(One Time Registration)
செய்வதற்காக அடிப்படை விவரங்கள்
செயலியில் பதிவு செய்ய வேண்டும்.
வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கான இலக்கு கிராம வாரியாக தமிழ்நாடு அரசின் வேளான்மைப் பொறியியல் துறையின் இணையதளமான
(https//mtsaed.tn.gov.in) வாயிலாக
பதிவேற்றம் செய்யப்படும்.
வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்ட கிராமங்களில்
(Agri stack - Tamilnadu Farmer Registry)
பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் மட்டுமே ஒவ்வொரு மாதமும் 1 முதல் 7 -ம் தேதி வரை அல்லது 15 முதல் 21- ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு மாதமும் 8-ம் தேதி அன்று,
அம்மாதத்தில் 1 முதல் 7 -ம் தேதி வரை
விண்ணப்பித்த விவசாயிகளின்
விண்ணப்பங்கள்
வேளாண் இயந்திரம் அல்லது கருவிகளின் இலக்கிற்கு ஏற்றவாறு முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட
குலுக்கல் தேர்வு முறையில்
(Lottery System)
இணையதளத்தின் வாயிலாக
தேர்ந்தெடுக்கப்படும்
மேலும் இத்திட்டம் தொடர்பாக
முழு விவரங்களை பெற்று பயனடைய விருப்பமுள்ள விவசாயிகள்
செயற்பொறியாளர் அலுவகம்,
வேளாண்மை பொறியியல் துறை,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
கிருஷ்ணகிரி
தொடர்பு எண் : 04342-238959,
உதவி செயற்பொறியாளர்
(வே.பொ) அலுவலகம்,
வேளாண்மை பொறியியல் துறை.
கிருஷ்ணகிரி
மற்றும்
உதவி செயற்பொறியாளர்
(வே.பொ) அலுவலகம்,
வேளாண்மை பொறியியல் துறை,
சென்னாத்தூர் அஞ்சல்,
சானசந்திரம்,
ராயக்கோட்டை ரோடு.
ஓசூர்
ஆகிய அலுவலகங்களை
தொடர்புக்கொள்ளலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார். இ.ஆ.ப,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
---------------------------------------.