தேர்தல் எழுத்தறிவு
மன்ற ஒருங்கிணைப்பாளர்களுடன்
(ELC Coordinators)
கலந்தாய்வுக் கூட்டம்
தலைமை -
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார், இ.ஆ.ப.
கிருஷ்ணகிரி. அக். 9. -
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்
அலுவலக கூட்டரங்கில்,
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி,
தேர்தல் எழுத்தறிவு மன்றம் 2.0
(Electoral Literacy Club 2.0)
குறித்து, தேர்தல் எழுத்தறிவு
மன்ற ஒருங்கிணைப்பாளர்களுடன்
(ELC Coordinators)
கலந்தாய்வுக் கூட்டம்
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார், இ.ஆ.ப.
அவர்கள் தலைமையில் 08.10.2026 அன்று நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் தெரிவித்ததாவது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தேர்தல் எழுத்தறிவு மன்றம் அமைத்து அதன் மூலமாக மாணவர்களுக்கு தேர்தல் தொடர்பான
அடிப்படைக் கோட்பாடுகள்,
அரசியலமைப்பின் அதிகாரம்,
தேர்தல் ஆணையத்தின் படிநிலைகள்,
வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல்
நடைபெறுதல் தொடர்பாகவும்,
தேர்தல் எழுத்தறிவு மன்ற ஒருங்கிணைப்பாளர்களுக்கு
அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மாணவர்களுக்கிடையே தேர்தல் மற்றும் ஜனநாயகம் தொடர்பான
வினாடி வினா,
கட்டுரை போட்டி,
ஓவியம் வரைதல் போட்டி
பேச்சுப்போட்டி
ஆகியவற்றை நடத்திடவும்
ஒவ்வொரு வகுப்பிலும்
தேர்தல் எழுத்தறிவு மன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் விவரங்களை
ECINET இணையதளத்தில் பதிவு செய்தும்,
அவர்களில்
தலைவர்,
துணைத் தலைவர்.
தேர்ந்தெடுத்து.
தேர்தல் எழுத்தறிவு மன்ற
செயல்பாட்டுக் குழு மூலம்
மேற்கண்ட செயல்பாடுகள் மேற்கொண்டு
அதன் புகைப்படங்களை
அதற்கென பிரத்யேகமாக
வடிவமைக்கப்பட்ட இணையதளமான
ECINET -ல் பதிவேற்றம்
செய்ய வேண்டுமென
அறிவுறுத்தப்பட்டது.
மேற்கண்ட பணிகளின் முக்கிய நோக்கம்,
நாட்டின் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் தொடர்ச்சியான கற்றலுக்கான.
வெளிப்படையான மற்றும்
டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்படும் தளங்களாக தேர்தல் எழுத்தறிவு மன்றங்களை (ELCs) நிறுவுவதன் மூலம்
ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாகும்.
தேர்தல் செயல்முறை குறித்த உண்மை மற்றும் அனுபவப்பூர்வமான புரிதலை ஊக்குவித்தல்,
இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள் மற்றும் விழுமியங்களில் மீது பெருமிதத்தை ஏற்படுத்துதல் மற்றும் இளம் குடிமக்களைத் தங்கள் குடும்பங்கள்,
நிறுவனங்கள் மற்றும் சமூகங்களுக்குள்
தேர்தல் விழிப்புணர்வின் தூதுவர்களாக மாற்றுவதற்கு வலுவூட்டுதல் ஆகுமென தெரிவிக்கப்பட்டது.
. மேலும் இளம் வாக்காளர்கள் தேர்தல் நடவடிக்கைகளில் பங்கெடுப்பதன் முக்கியத்துவம் குறித்து விரிவாக விளக்கி கூறப்பட்டது.
தேர்தல் எழுத்தறிவு மன்றம் 2.0 வில் சிறப்பாக செயல்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தேசிய வாக்காளர் தினத்தன்று மாவட்ட நிர்வாகம் சார்பிலும்,
மாநில அளவில் சிறப்பாக செயல்படும் பள்ளி கல்லூரிகளுக்கு தேர்தல் ஆணையத்தின் மூலம் விருதுகள் வழங்கப்படும் என
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில்,
ஓசூர் சார் ஆட்சியர்
திருமதி.ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப.
தனித்துணை ஆட்சியர்
(சமூக பாதுகாப்பு திட்டம்)
திருமதி.அபிநயா.
மாவட்ட வழங்கல் அலுவலர்
திருமதி.கீதா ராணி,
உதவி ஆணையர் (ஆயம்)
திரு.பழனி.
வட்டாட்சியர் (தேர்தல்)
திரு.சம்பத்து.
மற்றும் வட்டாட்சியர்கள்,
வாக்காளர் பதிவு அலுவலர்கள்,
உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள்,
பள்ளி மற்றும் கல்லூரிகளில் நியமனம் செய்யப்பட்ட தேர்தல் எழுத்தறிவு ஒருங்கிணைப்பாளர்கள்,
துறை சார்ந்த அலுவலர்கள்
கலந்துக்கொண்டனர்.
----------------------------------------------.