கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
சிஐஐ பவுண்டேஷன்,
இந்திய தொழில் துறை கூட்டமைப்பு
சார்பாக தொழில் முனைவோருக்கான
வணிக உருமாற்றம் திட்ட கருத்தரங்கு
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
பங்கேற்பு
ஓசூர். செப். 11. –
தொழில்முனைவோர் தொழில்நுட்பத்தை ஏற்று, நிலையான வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் -
தொழில் மாற்றத் திட்ட நிகழ்ச்சியில்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் அறிவுறுத்தல்.
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஒசூர் டி.ஜி.ஐ கிராண்ட் ஃபார்ச்சூனா
(TGI GRAND FORTUNA) கூட்டரங்கில்,
சிஐஐ பவுண்டேஷன்,
இந்திய தொழில் துறை கூட்டமைப்பு சார்பாக
தொழில் முனைவோருக்கான
வணிக உருமாற்றம் திட்ட கருத்தரங்கை
மாவட்ட ஆட்சித் தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் (10.09.2026) துவக்கி வைத்து
பயிற்சியில் கலந்துக்கொண்டவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் தெரிவித்ததாவது:
சிஐஐ பவுண்டேஷசன்,
இந்திய தொழில்துறை கூட்டமைப்பு
சார்பாக தொழில் முனைவோருக்கான வணிக உருமாற்றம் திட்ட கருத்தரங்கில் இங்கு வந்திருக்கக்கூடிய தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள்,
இங்கு கூடியுள்ள தொழில் முனைவோர்கள்
உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பார்ந்த வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பயிற்சியில் தொழில் நிறுவனங்களை நடைமுறையில்
திறம்பட நடத்துதல்,
நிலையான வளர்ச்சி,
சந்தைப்படுத்துதல்,
நிதி மேலாண்மை,
பணப்புழக்க மேலாண்மை,
விற்பனை உத்திகள்,
குழு உருவாக்கம்,
தொழில்நுட்பம் மற்றும்
செயற்கை நுண்ணறிவு
(Artificial Intelligence)
உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள்
குறித்து தொழில்முனைவோருக்கு
பயிற்சி அளிக்கப்பட்டது.
தொழில்முனைவோர் புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொண்டு,
நிதி ஒழுங்குமுறையை கடைப்பிடிப்பதுடன், தங்களது தொழில் நிறுவனங்களின்
நிலையான வளர்ச்சியில்
கவனம் செலுத்த வேண்டும்.
"தொழிலை முன்னெடுத்துச் செல்ல ஆர்வமும் ஈடுபாடும் முக்கியமானது. ஆனால்,
அது நிதி ஒழுங்குமுறையை மீறிவிடக் கூடாது”.
தொழில் நிறுவனங்களின் வெற்றிக்கு நிதி ஒழுங்குமுறை மிகவும் அவசியம்.
மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியை தொழில்முனைவோர் ஏற்றுக்கொண்டு,
தங்களது தொழில் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு அவற்றை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் உரையாற்றினார்.
தொடர்ந்து
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்
"ஒசூர் தொழில் மற்றும்
பொருளாதார வளர்ச்சி" க்கான அறிக்கையை வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில்
ஒசூர் இந்திய தொழில் துறை கூட்டமைப்பு
துணைத் தலைவர்
முனைவர் ஜி. மதியழகன்,
வட்டாட்சியர்
திரு.ஜெகதீஸ்குமார்
மற்றும் தொழில் முனைவோர்கள் கலந்துக்கொண்டனர்.
---------------------------------------------------.