டெங்கு தடுப்பு
மாபெரும் தூய்மை பணி
பிரச்சாரம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
உள்ள மக்கள்
டெங்கு,
எலிக்காய்ச்சல்,
உண்ணி காய்ச்சல்
தடுப்பு பணிகள் மற்றும்
நோய் பரவலைக் கட்டுப்படுத்த
இரண்டு வார கால
மாபெரும் தூய்மை பணி பிரச்சாரத்திற்கு
முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் வேண்டுகோள்.
கிருஷ்ணகிரி. செப். 23. –
பொது சுகாதாரம் மற்றும்
நோய் தடுப்பு மருந்து துறை
கிருஷ்ணகிரி மாவட்டம்,
தேன்கனிக்கோட்டை வட்டம்,
கெலமங்கலம் அரசினர் பலவகை
தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில்,
பொது சுகாதாரம் மற்றும்
நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக,
டெங்கு தடுப்பு பணிகள் மற்றும்
நோய் பரவலைக் கட்டுப்படுத்த
இரண்டு வார கால
மாபெரும் தூய்மை பணி பிரச்சாரத்தை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் இன்று (23.09.2026)
கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்ததாவது:
(லெப்டோஸ்பைரோசிஸ்),
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
டெங்கு,
எலிக்காய்ச்சல்
(லெப்டோஸ்பைரோசிஸ்),
உண்ணி காய்ச்சல்
உள்ளிட்ட கொசு மற்றும் எலி மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மாவட்டம் முழுவதும் இரண்டு வார கால தீவிர தூய்மைப் பணி பிரச்சாரத்தை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தேங்கி நிற்கும் மழைநீர்,
அடர்ந்த புதர்கள்,
கழிவுகள்
மற்றும்
பராமரிக்கப்படாத சுற்றுப்புறச் சூழல்
ஆகியவை
கொசு இனப்பெருக்கத்திற்கும்,
எலி மூலம் பரவும் நோய்களின்
வளர்ச்சிக்கும் முக்கிய
காரணமாக உள்ளதால்,
அவற்றை தடுக்கும் விதமாக,
மழைக்காலம் தொடங்குவதற்கு
முன்னதாகவே,
மாவட்டம் முழுவதும் உள்ள
அரசு கட்டிடங்கள்,
பள்ளிகள், கல்லூரிகள்,
அங்கன்வாடி மையங்கள்,
விடுதிகள் மற்றும்
தொழிற்சாலைகளில்
தூய்மை பணி மேற்கொள்ள
சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த 2 வார கால
தீவிர தூய்மைப் பணி பிரச்சாரத்தின் மூலம்
கொசு இனப்பெருக்க இடங்களை
முற்றிலும் அகற்றி,
பாதுகாப்பான குடிநீர் வழங்கி,
மாவட்ட மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கப்படும்.
அதேபோல்,
பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் வளாகங்களைச் சுற்றி தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
டெங்கு, எலிக்காய்ச்சல் மற்றும் உண்ணி காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனை அல்லது சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்துகொண்டு, மருத்துவரின் ஆலோசனைப்படி உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
முன்னதாக,
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் தலைமையில்,
டெங்கு தடுப்பு பணிகள் குறித்த சுகாதார
உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
நான் எனது வீட்டிலோ
வீட்டின் சுற்றுப்புறத்திலோ
டயர்,
தேங்காய் சிரட்டைகள்,
உடைந்த குடங்கள்,
உபயோகமற்ற பிளாஸ்டிக் கப்புகள்
போன்ற பொருட்களை போடமாட்டேன்.
அவ்வாறு ஏதேனும் வீணான பொருட்கள் கிடந்தாலும் அவற்றை அகற்றி விடுவேன்.
எனது வீட்டில் தண்ணீர் சேமித்து வைக்கும்
குடங்கள்,
சிமெண்ட் தொட்டிகள்,
டிரம்கள்
ஆகியவற்றை கொசு புகாதவண்ணம் மூடி வைப்பேன்.
வாரம் ஒரு முறை தேய்த்துக் கழுவி சுத்தம் செய்வேன்.
இதன் மூலம் ஏடிஸ் கொசுப்புழு வளராமல் தடுப்பேன்.
நான் கற்றுக்கொண்டவற்றை அண்டை, அயலார்க்கும் கற்றுக் கொடுத்து
டெங்கு காய்ச்சலை பரப்பும்
ஏடிஸ் கொசு
உருவாகாமல் பார்த்துக்கொள்வேன்.
தற்பொழுது அரசு எடுத்து வரும் அனைத்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கும் நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்
என்று உளமாற உறுதி மொழி கூறுகிறேன் என
சுகாதார அலுவலர்கள்,
மருத்துவர்கள்,
கல்லூரி மாணவ, மாணவிகள்,
துறை சார்ந்த அலுவலர்கள்,
தூய்மை பணியாளர்கள்
உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து,
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள்,
தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள
தீவிர காய்ச்சல் (டெங்கு) தடுப்பு பிரிவை
நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு,
தீவிர காய்ச்சல் சிகிச்சைக்காக
வரப்பெற்றவர்கள் விபரம்,
அவர்களுக்கு வழங்கப்பட்ட
மருத்துவச் சிகிச்சைகள்,
குணமடைந்து வீடு திரும்பியவர்களின் விபரங்களை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து,
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
செயல்படுத்துவது குறித்து
முன்னேற்பாடு பணிகள்,
பாதுகாப்பு பெட்டக அறையில்
கண்காணிப்பு கேமரா
பொருத்தப்பட்டுள்ளதையும்,
விழா நடைபெறும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டு,
இத்திட்டத்தில் பயனடையும் பயனாளிகளின் விபரங்கள்,
எண்ணிக்கைகள்,
இத்திட்டத்திற்கான பயனாளிகளை
அவர்களது வீட்டிற்கு சென்று
வாகனங்கள் மூலம் பாதுகாப்பாக
அழைத்து வருவதற்காக எடுக்கப்பட்டுள்ள
நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து,
ஓசூர் மாவட்ட அரசு தலைமை
மருத்துவமனையில்
ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள தீவிர காய்ச்சல் (டெங்கு தடுப்பு பிரிவுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து,
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
செயல்படுத்துவது குறித்து
முன்னேற்பாடு பணிகள்,
பாதுகாப்பு பெட்டக அறையில்
கண்காணிப்பு கேமரா
பொருத்தப்பட்டுள்ளதையும்,
விழா நடைபெறும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டு,
இத்திட்டத்தில் பயனடையும் பயனாளிகளின் விபரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில்,
ஓசூர் சார் ஆட்சியர்
திருமதி.ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப.,
உதவி ஆட்சியர் (பயிற்சி)
திரு.சாய் சைதன்யா ஜாதவ் இ.ஆ.ப.,
மாவட்ட சுகாதார அலுவலர்
மரு.ஜெகநாதன்,
ஓசூர் அரசு தலைமை மருத்துவமனை
தலைமை மருத்துவர்
மரு.லட்சுமி ஸ்ரீ,
உள்ளிருப்பு மருத்துவர்
மரு.புவனா ஜெயபால்,
தேன்கனிக்கோட்டை
அரசு மருத்துவமனை மருத்துவர்
மரு.கிரிஜா,
வட்டார மருத்துவ அலுவலர்
மரு.ராஜேஷ்,
வட்டாட்சியர்கள்
திரு.சண்முகம் (தேன்கனிக்கோட்டை),
திரு.ஜெகதீஸ் குமார் (ஓசூர்),
வட்டார அலுவலர்கள்
திரு.குமரேசன்,
திரு.ராஜேஷ்,
அரசு பலவகை தொழில்நுட்பக்
கல்லூரி முதல்வர்.
திரு. கோவிந்தாராஜூ
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், கல்லூரி மாணவிகள், தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
----------------------------------------------------.