கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
பேடரப்பள்ளி அரசு பள்ளியில்
பள்ளி மேலாண்மை குழு
மறுகட்டமைப்பு கூட்டம்
2026–28-ம் ஆண்டுக்கான
புதிய நிர்வாகிகள் தேர்வு –
250க்கும் மேற்பட்ட பெற்றோர்கள்
பங்கேற்பு
ஓசூர், செப்டம்பர். 26:
பேடரப்பள்ளி
அரசுப்பள்ளி
மேலாண்மைக் குழு
மறுகட்டமைப்பு
ஓசூர் ஒன்றியம், பேடரப்பள்ளி
அரசு நடுநிலைப் பள்ளியில்
2026–28-ம் ஆண்டிற்கான
பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு
மற்றும்
புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம்
சிறப்பாக நடைபெற்றது.
மாவட்டத்தில்
சிறந்த அரசுப்பள்ளி
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட
பேடரப்பள்ளி, 3-வது வார்டில்
மாநகராட்சி நடுநிலைப்பள்ளி
இயங்கி வருகிறது.
இந்தப்பள்ளியில்1-வது வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை
825 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இங்கு தமிழ் மற்றும் ஆங்கில வழியில்
நல்லொழுக்கத்துடன்,தரமான கல்வி கற்பிக்கப்படுகிறது.
இங்கு பயிலும் மாணவர்கள்
கல்வியில் மட்டுமின்றி,
வட்ட, மாவட்ட, மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள், கலைப்போட்டிகள், தேசிய அளவிலான NMMS தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் முதலிடத்தில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.
இதனால் இந்த அரசுப்பள்ளி மாவட்டத்தில் உள்ள சிறந்த அரசுப்பள்ளிகளில் முன்னணியில் திகழ்கிறது.
இப்படி பல்வேறு சிறப்புகள் பெற்ற
இந்த பேடரப்பள்ளி அரசுப்பள்ளியில்
2026-28-ம் ஆண்டிற்கான பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு கூட்டம் செப்டம்பர். 26-ம் தேதியன்று நடைபெற்றது.
தலைமையுரை
பள்ளியின் தலைமை ஆசிரியர்
திரு. எஸ். பொன்நாகேஷ்.
அவர்கள்
தலைமை வகித்து உரையாற்றினார்.
வரவேற்புரை
கணித பட்டதாரி ஆசிரியை
திருமதி பியூலா
அவர்கள்
அனைவரையும் வரவேற்று
உரையாற்றினார்.
தேர்தல் மேற்பார்வையாளர்
ஜூஜூவாடி அரசு மேல்நிலைப் பள்ளி
முதுகலை ஆசிரியர்
திரு. இளங்கோ.
அவர்கள்
மேற்பார்வையாளராக
கலந்து கொண்டு, சிறப்புரையாற்றி
சான்றிதழ்கள் வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்கள்
மாமன்ற உறுப்பினர்
திரு. ரஜினிகாந்த்,
அவர்கள் சிறப்புரையாற்றி
சான்றிதழ்கள் வழங்கினார்.
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்
திரு. லக்கப்பா,
திரு. சுந்தரமூர்த்தி,
திரு. ரவி,
திரு. செல்லப்பா
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நிர்வாகி
திரு. முருகேச பாண்டியன்.
அவர்கள்
ஆகியோர் பங்கேற்று
சிறப்புரையாற்றினார்கள்.
கலை நிகழ்ச்சிகள்
இந்நிகழ்ச்சியில்...
250க்கும் மேற்பட்ட பெற்றோர்கள்
ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
பெற்றோர்களை வரவேற்கும் விதமாக
பள்ளி மாணவ, மாணவிகளின் சார்பில்
நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாணவர்களின் பன்முகத் திறமைகளை வெளிப்படுத்திய இந்நிகழ்ச்சிகள்
பெற்றோர்களின் பாராட்டைப் பெற்றன.
2026-28-ம் ஆண்டிற்கான
பள்ளி மேலாண்மைக் குழு
புதிய நிர்வாகிகள்
தலைவி
1. எஸ் வித்யா.
துணைத்தலைவர்
2. வி. வேல்முருகன்.
தலைமை ஆசிரியர்
3. எஸ். பொன் நாகேஷ்.
ஆசிரியர்
4. கே. புனித ஜெனட்
சாந்தி பாய்.
பெற்றோர் உறுப்பினர்
5. வி. சாருலதா.
பெற்றோர் உறுப்பினர்
6. பி. கோபால்.
பெற்றோர் உறுப்பினர்
7. எஸ். பிரியா.
பெற்றோர் உறுப்பினர்
8. எஸ். ரத்தினம்மா.
பெற்றோர் உறுப்பினர்
9. எம். புஷ்பா.
பெற்றோர் உறுப்பினர்
10. கே. நிஷாந்தினி.
பெற்றோர் உறுப்பினர்
11. கே. யு. யுவராணி.
பெற்றோர் உறுப்பினர்
12. எம். நீலாவதி.
பெற்றோர் உறுப்பினர்
13. எம். குமார்.
பெற்றோர் உறுப்பினர்
14. கே. பவித்ரா.
பெற்றோர் உறுப்பினர்
15. எல். உஷா.
பெற்றோர் உறுப்பினர்
16. ஆர். சரவணன்.
மாமன்ற பிரதிநிதி
17. எம். ரஜினிகாந்த்.
மாமன்ற பிரதிநிதி
18. ஆறுமுகம்
ஐடி கே தன்னார்வலர்
19. ஜி. சரளா.
சுய உதவி குழு உறுப்பினர் (பெற்றோர்)
20. வை. செல்வி .
முன்னாள் மாணவ உறுப்பினர் (பெற்றோர்)
21. எம். ஹேமா.
முன்னாள் மாணவ உறுப்பினர் (பெற்றோர்)
22. ஏ. வினோ.
முன்னாள் மாணவ உறுப்பினர் (பெற்றோர்)
23. பி. சிவசங்கர்.
முன்னாள் மாணவர் (பொது)
24. எஸ். ரவி.
ஆகிய 12 பெற்றோர் உறுப்பினர்கள்,
3 முன்னாள் மாணவர்/பெற்றோர் உறுப்பினர்கள் உள்ளிட்ட மொத்தம் 24 உறுப்பினர்கள்
தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இதில்
பள்ளி மேலாண்மை குழுவின் தலைவியாக
திருமதி வித்யா,
துணைத் தலைவராக
திரு. வேல்முருகன்
ஆகியோர் ஒருமனதாகத்
தேர்வு செய்யப்பட்டனர்.
வாழ்த்து
பாராட்டு
புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட
அனைத்து உறுப்பினர்களையும்
பட்டதாரி ஆசிரியை
திருமதி. மேரி ஹேமா
பாராட்டி வாழ்த்தினார்.
பொன்னாடை அணிவித்து
கவுரவிப்பு
தலைமை ஆசிரியர்
திரு. பொன்நாகேஷ்,
மாமன்ற உறுப்பினர்
திரு. ரஜினிகாந்த்,
திரு. ரவி,
திரு. லக்கப்பா
உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்து சான்றிதழ்களை வழங்கினர்.
ஆசிரியர்கள்
மற்றும்
ஏற்பாட்டாளர்களுக்கு பாராட்டு
பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக மேற்கொண்டிருந்தனர்.
நன்றியுரை
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு
சிறப்பித்த பெற்றோர்கள்,
புதிய நிர்வாகிகள்,
ஆசிரியர்கள் மற்றும்
சிறப்பு அழைப்பாளர்களுக்கு
ஆசிரியை
திருமதி. நந்தினி.
நன்றி தெரிவித்தார்.
பள்ளி மேலாண்மைக்குழு
புதிதாக அமைக்கப்பட்ட
பள்ளி மேலாண்மை குழுவின் மூலம்
பள்ளியின் கல்வி வளர்ச்சி,
மாணவர்களின் நலன் மற்றும்
பள்ளி அடிப்படை வசதிகள்
உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளை
மேலும் சிறப்பாக முன்னெடுக்க
நடவடிக்கை எடுக்கப்படும் என
தெரிவிக்கப்பட்டது.
-------------------------------------------------.