விநாயகர் சதுர்த்தி விழா
ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட
ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்
விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான
ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
மாவட்ட ஆட்சித் தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தலைமையில் இன்று
(3.09.2026) நடைபெற்றது,
கிருஷ்ணகிரி. செப். 3. -
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் தெரிவித்ததாவது:
விநாயகர் சதுர்த்தி விழாவை
பொதுமக்களின் பாதுகாப்பு,
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும்
சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு
அமைதியான முறையில்
கொண்டாடுவதற்கு,
அரசு வெளியிட்டுள்ள அனைத்து
வழிகாட்டு நெறிமுறைகளையும்,
விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாட்டாளர்கள்
தவறாது பின்பற்ற வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
சிலையை அமைக்க விரும்பும்
ஏற்பாட்டாளர்கள்,
முன்கூட்டியே சார் ஆட்சியர் /
வருவாய் கோட்டாட்சியரிடம்
விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.
தனியார் இடங்களில் சிலை வைக்க
நில உரிமையாளர்கள் இடம்
சம்மதம் பெற வேண்டும்.
பொது இடங்களில் சிலை வைக்க சம்பந்தப்பட்ட துறை அனுமதி பெற வேண்டும்.
மேலும், தீ தடுப்பு மற்றும் மின் இணைப்பு சான்றுகள் பெற வேண்டும்.
விழா ஏற்பாட்டாளர் கோரிக்கையினை ஏற்று ஒசூர்/கிருஷ்ணகிரி கோட்டங்களில் ஒற்றை சாளர முறை (Single Window System) மூலம் விண்ணப்பித்து சான்றிதழ் பெற வேண்டும்.
நிறுவப்படும் விநாயகர் சிலைகள் 10 அடி உயரத்திற்குள் இருக்க வேண்டும்.
சிலைகள் சுத்தமான களிமண் மற்றும் நீரில் எளிதில் கரையக்கூடிய, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
சிலைகள் தயாரிப்பில; Plaster of Paris (POP) பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், தடை செய்யப்பட்ட வண்ணங்கள்/இரசாயனப் பூச்சுகள் பயன்படுத்தக் கூடாது என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
விநாயகர் சிலைகள் அமைக்கப்படும் பந்தல்கள், எளிதில் தீப்பிடிக்காத பொருட்களைக் கொண்டு, போதிய இடவசதி மற்றும் தனித்தனி நுழைவு மற்றும் வெளியேறும் வசதிகளுடன் அமைக்கப்பட வேண்டும்.
பந்தல்களில் முதலுதவி பெட்டி, தீத்தடுப்பு மற்றும் தீயணைப்பு உபகரணங்கள் உள்ளிட்ட தேவையான பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அவசரகால தேவைகளைக் கருத்தில் கொண்டு மின்சார வசதிகள் பாதுகாப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் எதிர்ப்பு உள்ள இடங்களில் விநாயகர் சிலைகளை அமைக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது.
ஒலிபெருக்கிகள் பெட்டி வடிவில், குறைந்த ஒலியுடன், காலை 2 மணி நேரமும், மாலை 2 மணி நேரமும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
மத, சாதி மற்றும் சல உணர்வுகளைத் தூண்டும் வகையிலான கோஷங்கள், பதாகைகள், விளம்பரங்கள் செயல்பாடுகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
விழா அமைதியான முறையிலும் ஆ மதத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் நடத்த வேண்டும்.
விநாயகர் சிலைகள், அனுமதிக்கப்பட்ட இடங்களில் மற்றும் அனுமதிக்கப்பட்ட பாதையில், சம்பந்தப்பட்ட அலுவலர்களால் தெரிவிக்கப்படும் வழிமுறைகளின்படி நீரில் கரைக்கப்பட வேண்டும்.
சிலைகளை நிறுவிய நாளிலிருந்து அனுமதிக்கப்பட்ட கால வரம்பிற்குள் விசர்ஜனம் மேற்கொள்ள வேண்டும்.
சிலைகளை நீரில் கரைப்பதற்காக நல்ல நிலையில் உள்ள, பாதுகாப்பான நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு அதிகமாக நபர்களை ஏற்றிச் செல்லக் கூடாது. சிலைகளை எடுத்துச் செல்லும் போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்கக் கூடாது.
பட்டாசுகள் மற்றும் வெடிகளை வெடிக்க அனுமதி இல்லை. பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விழா ஏற்பாட்டாளர்கள் நடந்து கொள்ள வேண்டும். விநாயகர் சிலை தயாரிப்பாளர்கள், அரசு வகுத்துள்ள விதிமுறைகளின்படி, தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் வண்ணங்களைப் பயன்படுத்தாமல், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் சிலைகளை தயாரிக்க வேண்டும்.
விதிகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது.
எனவே, மேலே கூறப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றி, மாசு இல்லாத விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் கொண்டாட வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்தார்
இக்கூட்டத்தில்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திருமதி.அனிதா,
மாவட்ட வருவாய் அலுவலர்
திருமதி.மஞ்சுளா,
ஓசூர் சார் ஆட்சியர்
திருமதி.ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
திட்ட இயக்குநர்
திருமதி.உமா மகேஸ்வரி,
மாவட்ட ஆட்சியர்
நேர்முக உதவியாளர் (பொது)
திரு.முருகேசன்,
கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர்
திரு.ஷாஜகான்
உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
------------------------------------------------.