விவசாயிகள்
குறை தீர்க்கும் நாள்
கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
141 மனுக்கள் பெறப்பட்டது.
தலைமை ......
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
கிருஷ்ணகிரி. செப். 18. –
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்
அலுவலக கூட்டரங்கில்,
வேளாண்மைத்துறை சார்பாக,
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தலைமையில் (18.09.2026)
நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் குறைகளை நேரடியாக கேட்டு அவற்றை நிவர்த்தி செய்ய ஏதுவாக ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்
விவசாயிகள்
குறை தீர்க்கும் நாள் கூட்டம்
நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் இன்று (18.09.2026) நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்
141 மனுக்கள் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில், விவசாயம் சார்ந்த பொதுப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது வறட்சி அதிக அளவில் உள்ளதால் அரசு மூலம் கால்நடைகளுக்கு தீவனம் மற்றும் உலர் தீவனம் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டதையடுத்து,
42 ஏக்கர் அரசு மேய்ச்சல் நிலம் அடையாளம் காணப்பட்டு சுய உதவிக்குழுக்கள் மூலம் தீவனப்பயிர் சாகுபடி செய்து விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும்.
தொடர்ந்து, அட்மா திட்டத்தின் கீழ்,
போச்சம்பள்ளி பகுதியில்
வெட்டிவேர் வளர்ப்பிற்கு பயிற்சி வழங்கவும்,
நெல்,
ராகி,
நிலக்கடலை,
துவரை,
மா
தென்னை
ஆகிய பயிர்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரியும்,
யூரியா தட்டுப்பாடு உள்ள நிலையில் அதனை ஆய்வு செய்து உரக்கடத்தலை தடுக்கவும்,
போதிய அளவு உரம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளவும்,
தோட்டக்கலைத்துறை மூலம்
உயர் ரக தென்னை நாற்றுகள்
(குட்டை, நெட்டை செடி, நெட்டை குட்டை செடி) மானிய விலையில் வழங்கவும்,
பிளாஸ்டிக் பைகள் உற்பத்தியால் விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவதால்
பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் மாற்று பொருட்கள் உற்பத்தி செய்யவும்,
பிளாஸ்டிக் பை உற்பத்தியை தடுக்கவும்,
இராயக்கோட்டை பகுதியில்
பூ சந்தைக்கு தனி இடம் ஒதுக்கித்தரவும்,
தேன்கனிக்கோட்டை வட்டத்தில்,
பூச்சிக்கொல்லிகள்,
உரங்கள்
ஆகியவை அதிக விலையில் விற்பனை செய்வதைக் கண்காணித்து முறைப்படுத்திக் கொடுக்கவும்,
வேளாண்மைத்துறை மூலம் தனியர் நெல் இரகங்களுக்கு பதிலாக அரசின் புதிய நெல் இரகங்கள் வழங்கவும்,
அஞ்செட்டி பகுதியில் புதிய வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்கவும்
விவசாயிகளால் கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும், இக்கூட்டத்தில் விவசாயிகளால்
தடுப்பணை,
நில ஆக்கிரமிப்பு,
மின் இணைப்பு,
நீர்நிலை பராமரிப்பு,
வங்கி கடன்,
வனத்துறை,
கால்வாய் ஆக்கிரமிப்பு,
ஏரிகள் தூர்வாருதல்,
வண்டல் மண் அள்ளுதல்,
தார் சாலை சீரமைத்தல்,
பால்கொள்முதல்,
ஏரிகளுக்கு நீர் வழங்குதல்,
கறவை மாடு கடன்,
குடிநீர் விநியோகம்,
கூட்டுறவு கடன்,
சோலார் மின்வேலி அமைத்தல்,
கால்நடை மருத்துவமனை அமைத்தல்,
கோவில் நில ஆக்கிரமிப்பு,
குடிநீர் விநியோகம்,
வேளாண்மைத்துறை
மற்றும்
சகோதரத்துறைகளின் திட்டங்கள்
குறித்து கோரிக்கை வைக்கப்பட்டு
உரிய துறை அலுவலர்களால் பதில் வழங்கப்பட்டது.
விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில்,
மாவட்ட வருவாய் அலுவலர்
திருமதி.த.மஞ்சுளா,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
திட்ட இயக்குநர்
திருமதி.உமா மகேஸ்வரி,
இணை இயக்குநர்கள் (பொ)
திருமதி.உமா
(வேளாண்மைத்துறை),
திருமதி.குணவதி
(தோட்டக்கலைத்துறை),
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்
திரு.நடராஜன்,
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியார் (வேளாண்மை)
திருமதி. பா.ஏஞ்சலின் பொன்ராணி,
கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர்
மரு.மகேந்திரன்
மற்றும் வருவாய்துறை, ஊரக வளர்ச்சி துறை, நீர்வளத்துறை, சுகாதாரத்துறை, வனத்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.
----------------------------------------------.