மக்கள் தொடர்பு திட்ட முகாமில்
120 பயனாளிகளுக்கு
ரூ.10 லட்சத்து 14 ஆயிரத்து 047 மதிப்பிலான
நலத்திட்ட உதவிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் வழங்கினார்.
ஓசூர். அக். 14. –
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் வட்டம்,
பெத்தகொள்ளு கிராமத்தில்,
மக்கள் தொடர்பு திட்ட முகாம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தலைமையில்,
ஓசூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு.பாலகிருஷ்ணா ரெட்டி
அவர்கள் முன்னிலையில்
(14.10.2026) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.திளேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள் அறிவுறுத்தலின்படி,
பொதுமக்கள் எவ்வித சிரமமின்றி
அரசின் திட்டங்கள் மூலம்
பயன்பெறும் வகையில்
பொதுமக்கள் வசிக்கும் இருப்பிடத்திற்கு அருகிலேயே கோரிக்கை மனுக்கள் பெறுதல்,
நலத்திட்ட உதவிகள் வழங்குதல்
குறித்து துறை சார்ந்த அலுவலர்கள்
விளக்கம் அளிக்கும் வகையில்
மக்கள் தொடர்பு திட்ட முகாம்
மாதந்தோறும் நடத்தப்படுகிறது.
பொதுமக்கள்
பட்டா,
நில அளவை,
கழிவுநீர் கால்வாய்
உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காக
அரசு அலுவலகங்களை
நோக்கி அலையாமல்,
அரசே மக்களைத் தேடி வந்து
திட்டங்களை விளக்கி,
மனுக்களைப் பெற்று 30 நாட்களுக்குள்
உரிய தீர்வு காண்பதே
இந்த மக்கள் தொடர்பு முகாமின்
முக்கிய நோக்கமாகும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
துவரை விவசாயிகள் தங்களது விளைபொருளை அப்படியே குறைந்த விலைக்கு விற்பதைத் தவிர்த்து,
பருப்பாக உடைத்து மதிப்பு கூட்டி விற்பனை செய்தால் கூடுதல் வருவாய் ஈட்ட முடியும்.
இதற்காக மதிப்பு கூட்டு ஆலைகள்
அமைக்க 35% மூலதன மானியமும்
(ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இயந்திரத்திற்கு ரூ.35,000 மானியம்)
மற்றும் மீதமுள்ள வங்கிக் கடனுக்கு
3% வட்டி மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.
விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும்,
ஒசூர் பகுதி தமிழ்நாட்டின்
இரண்டாம் விவசாயப் புரட்சியை
முன்னெடுக்கும் பகுதியாகத் திகழ்கிறது.
இங்கு
ஆப்பிள்,
அவகேடோ,
ஜப்பானிய ரெட் டைமண்ட் கொய்யா,
அஸ்பாரகஸ் கீரை
பல வண்ண
அலங்கார மலர்கள்
வெற்றிகரமாகப் பயிரிடப்பட்டு
வருகின்றன.
மேலும்,
இம்முகாமிலேயே
முதலமைச்சரின் விரிவான
மருத்துவக் காப்பீட்டு அட்டை
இல்லாதவர்கள் அவர்களிடமிருந்து முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கான (CMCHIS) விண்ணப்பங்கள் பெறப்பட்டு,
இரு நாட்களில் காப்பீட்டு அட்டை வழங்கப்படவுள்ளது.
இதன் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.25 லட்சம் வரை கட்டணமில்லா உயர் சிகிச்சை பெற முடியும்.
மேலும்,
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு
"தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்"
கீழ் கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.
தனியார் மருத்துவமனைகளில் பிரசவத்திற்கு சராசரியாக ரூ.63,000 வரை செலவாகும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பான சூழலில் பிரசவம் பார்க்கப்பட்டு தாய்-சேய் நலம் உறுதி செய்யப்படுகிறது.
பொதுமக்கள் வீடுகளில் பிரசவம் பார்ப்பதைத் தவிர்த்து,
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,
ஒசூரில் ₹100 கோடியில் அமைக்கப்பட்டுள்ள "விரிவான அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு" (CEMONC) மையம்,
தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களைப் பயன்படுத்த வேண்டும்.
மேலும்,
ஒசூர் மாநகராட்சியில்
8 கி.மீ சுற்றளவுக்குள் இருந்த தடை நீக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்குப் பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
மேலும்,
பட்டா பெற்றவர்கள்
வீடு கட்டுவதற்காக
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு வழங்கும் மானியம் ரூ.3.50 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளார்.
வீடு கட்ட உரிய முறையில் மனு கொடுத்தால் பரிசீலினை செய்து வழங்கப்படும்.
மேலும், கிராமங்களில் வீடு இல்லாதவர்கள், அடிப்படை வசதிகள் மற்றும் மகளிர் குழுக்களின் கடன் தேவைகளைக் கண்டறிய
"TN-வெற்றி" திட்டக் கணக்கெடுப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இக்கணக்கெடுப்பில் கிராம பொதுமக்கள் கலந்துக்கொண்டு தங்கள் கோரிக்கைகளை வழங்க வேண்டும்.
மேலும், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு
"சிங்கப்பெண் கடன் வழங்கும் திட்டம்"
மூலம், தொடர்ந்து இயங்கும் குழுக்களுக்கு
ரூ.15,000 சுழல் நிதியும், அதன்பின் சமுதாய முதலீட்டு நிதியாக ரூ.1.50 லட்சம் வரை வெறும் 6% வட்டியில் கடனும் வழங்கப்படுகிறது.
பெண்கள் ஆடு/மாடு வளர்ப்பு, மதிப்பு கூட்டுப் பொருட்கள் தயாரித்தல் போன்றவற்றில் ஈடுபட வேண்டும் என்றும்,
விரைவில் "வெற்றி ஆடு வளர்க்கும் திட்டம்"
கீழ் 5 ஆடுகள் வழங்கும் அரசாணை
வெளிவர உள்ளது.
மேலும்,
"பிரதம மந்திரியின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின்"
கீழ் வீடுகளுக்கு சோலார் பேனல் அமைப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து கூடுதல் மானியம் வழங்கி வருகின்றன.
இதன் மூலம் மின் கட்டணத்தை முழுமையாகச் சேமிக்க முடியும் என்பதால் பொதுமக்கள் இத்திட்டத்திலும் பதிவு செய்து பயனடைய வேண்டும்.
பொதுமக்கள் முகாமில் அமைக்கப்பட்டிருந்த
அரசு அரங்குகளைப் பார்வையிட்டு,
தங்களுக்குத் தேவையான அனைத்து அரசுத் திட்டங்களையும் தவறாமல் பயன்படுத்திக்
கொள்ள வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து,
மக்கள் தொடர்பு திட்ட முகாமில்,
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக
10 கர்ப்பிணி தாய்மார்களுக்கு தலா ரூ.2000 மதிப்பில் ரூ. 20,000 மதிப்பிலான ஊட்டசத்து பெட்டகங்கள்,
மாவட்ட வழங்கல் துறை சார்பாக,
50 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள்,
சமூக பாதுகாப்பு திட்டம் சார்பாக,
12 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 500 மதிப்பில் திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள்,
வேளாண்மைத்துறை சார்பாக,
10 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 927 மதிப்பில் ராகி சிறுதளை, நுண்ணீர் பாசன கருவிகளும்,
தோட்டக்கலைத்துறை சார்பாக,
6 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 33 ஆயிரத்து 620 மதிப்பில் சொட்டுநீர் பாசனம், தக்காளி நாற்றுகள், மண்புழு உரக்கூடம், பண்ணை குட்டை அமைத்தல், நிழல் வலைக்கூடம், ரோஜா சாகுபடி பரப்பு விரிவாக்கம் செய்வதற்கான ஆணைகள்,
வருவாய் துறை சார்பாக,
20 பயனாளிகளுக்கு விவசாய மின் இணைப்பிற்கு தடையில்லா சான்று, சாதிச்சான்றிதழ்கள், வாரிசு சான்று, பட்டா மாறுதலுக்கான ஆணைகள்,
நில அளவைத்துறை சார்பாக
12 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாறுதலுக்கான ஆணைகள் என
மொத்தம் 120 பயனாளிகளுக்கு
ரூ.10 லட்சத்து 14 ஆயிரத்து 047 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து,
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள்,
ஒசூர் சட்டமன்ற உறுப்பினர்
அவர்கள் முன்னிலையில்
பொதுமக்களின் இருப்பிடத்திற்கே
நேரடியாக சென்று
கோரிக்கை மனுக்களை
பெற்றுக்கொண்டார்.
முன்னதாக,
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள்,
மருத்துவம் மற்றும்
மக்கள் நல்வாழ்வுத்துறை,
வேளாண்மைத் துறை,
தோட்டக்கலைத்துறை,
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்
ஆகிய துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும்
திட்டங்களின் செயல்விளக்க
கண்காட்சியை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில்,
ஒசூர் சார் ஆட்சியர்
திருமதி.ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப.,
தனித்துணை ஆட்சியர்
(சமூக பாதுகாப்பு திட்டம்)
திருமதி.அபிநயா,
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்
நல அலுவலர்
திரு.அமீர்பாஷா,
மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்
திரு.முருகேசன்,
வேளாண்மைத் துறை
இணை இயக்குநர் (பொ)
செல்வி.உமா,
வேளாண் பொறியியல் துறை
செயற்பொறியாளர்
திருமதி.நிர்மலதா,
மாவட்ட சமூக நல அலுவலர்
திருமதி.சக்தி சுபாசினி,
மாவட்ட ஆட்சியரின்
நேர்முக உதவியாளர் (வேளாண்மை)
திருமதி.ஏஞ்சலின் பொன்ராணி,
உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)
திரு.தமிழ்செல்வன்,
உதவி இயக்குநர் (நில அளவை)
திரு.ஜெயகிருஷ்ணன்,
வட்டாட்சியர்
திரு.கோ.ஜெகதீஸ் குமார்,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
திரு.சிராஜுதின்,
திரு.வெங்கடேசன்
மற்றும் தனி வட்டாட்சியர்கள்,
துணை வட்டாட்சியர்கள்,
வருவாய் ஆய்வாளர்கள்,
கிராம நிர்வாக அலுவலர்,
துறை சார்ந்த அலுவலர்கள்
கலந்துக்கொண்டனர்.
------------------------------------------------.