கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை வட்டம்,
ஆனேகொள்ளூ பஞ்சாயத்திற்குட்பட்ட
தொட்டபேளூர் கிராம ஊராட்சி ஒன்றிய
தொடக்கப் பள்ளியில்
கலைத் திருவிழாவில்
வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு
பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி
வாழ்த்து கூறிய
கெலமங்கலம் ஒன்றிய வட்டார
கல்வி அலுவலர்கள்.
தேன்கனிக்கோட்டை. அக். 12. –
பள்ளிக்கல்வித்துறை
கலைத் திருவிழா
2026-27 வட்டார அளவில்
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு
மாணவ மாணவியர்களுக்கு
நடைபெற்ற கலைத் திருவிழாவில்
தொட்டபேளுர் தொடக்கப்பள்ளி
மாணவ, மாணவிகள் பங்கேற்று
வெற்றி பெற்றனர்.
பாராட்டு விழா
வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு
தொட்ட பேளுர் ஊராட்சி ஒன்றிய
துவக்கப்பள்ளியில் அக்டோபர் 12-ம் தேதியன்று
பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும்
நிகழ்ச்சி நடைபெற்றது.
வட்டார கல்வி அலுவலர்கள்
பாராட்டு
இந்த நிகழ்ச்சியில்
தலைமை ஆசிரியர்
திரு. கே. வெங்கடேசலு,
முன்னிலையில்
கெலமங்கலம் ஒன்றிய வட்டார
கல்வி அலுவலர்கள்
திரு. லோகேஷ்.
திரு. பயாஸ்.
ஆகியோர் கலந்து கொண்டு
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு
பாராட்டு சான்றிதழ்கள்
வழங்கி வாழ்த்தினார்கள்.
இதில் ஆசிரியர்கள், மாணவர்கள்
கலந்து கொண்டனர்.
------------------------------------.