டாக்டர் ராதாகிருஷ்ணன்
நல்லாசிரியர் விருது
கிருஷ்ணகிரி மாவட்டம்
தளி ஒன்றியம்
சூடசந்திரம் PUMS அரசுப்பள்ளி
தலைமையாசிரியர்
திரு. C. நாகராஜு
அவர்களுக்கு 2026-27-ம் ஆண்டுக்கான
டாக்டர் ராதாகிருஷ்ணன்
நல்லாசிரியர் விருது
பள்ளிக்கல்வித்துறை
அமைச்சர் ராஜ்மோகன்
வழங்கினார்.
ஓசூர். செப். 06. –
தளி ஒன்றியத்தில் உள்ள
சூடசந்திரம் PUMS அரசுப்பள்ளியில்
தலைமையாசிரியராக பணியாற்றி வரும்
C. நாகராஜு
அவர்களுக்கு
2026-27-ம் ஆண்டுக்கான
டாக்டர் ராதாகிருஷ்ணன்
நல்லாசிரியர் விருதை
பள்ளிக்கல்வித்துறை
அமைச்சர் ராஜ்மோகன்
வழங்கி கவுரவித்தார்.
மறைந்த குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்.5-ம் தேதி தேசிய ஆசிரியர் தினமாகக் கொண்டா டப்படுகிறது.
அதையொட்டி, மாநில அளவில் சிறந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்து
‘டாக்டர் ராதாகிருஷ்ணன்
நல்லாசிரியர் விருது’
வழங்கி தமிழக அரசு கவுரப்படுத்தி வருகிறது.
இந்த விருது பெறுபவர்களுக்கு
ரூ.10,000 ரொக்கம்,
36.5 கிராம் வெள்ளிப் பதக்கம் மற்றும்
பாராட்டுச் சான்றிதழ்
வழங்கப்படுகிறது.
அதன்படி நடப்பாண்டில்
396 ஆசிரியர்கள் மாநில நல்லாசிரியர்
விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் அரசுப் பள்ளிகளில் 342 போ்,
தனியாா் பள்ளிகளில் 38 போ்,
ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் 2 போ்,
சமூக பாதுகாப்புத் துறை பள்ளிகளில் 2 போ்,
மாற்றுத்திறன் ஆசிரியா்கள் 2 போ்,
மாநில கல்வியியல் ஆராய்ச்சி,
பயிற்சி நிறுவன (எஸ்சிஇஆா்டி)
பேராசிரியா்கள் 10 போ்
என மொத்தம் 396 போ்
விருதுக்கு தோ்வு செய்யப்பட்டு
விருது வழங்கப்பட்டுள்ளது.
தளி சூடசந்திரம் PUMS
தலைமையாசிரியருக்கு
டாக்டர் ராதாகிருஷ்ணன்
நல்லாசிரியர் விருது
விருது வழங்கும் விழா
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில் செப்டம்பர் 5-ம் தேதியன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு
பள்ளிக்கல்வித் துறைச் செயலர்
பி.சந்திரமோகன்
தலைமை வகித்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக
பள்ளிக் கல்வித் துறை
அமைச்சர் ராஜ்மோகன்
பங்கேற்று தளி ஒன்றியம் சூடசந்திரம் PUMS அரசுப்பள்ளியில் பணியாற்றும்
தலைமையாசிரியர்
C. நாகராஜு
அவர்களுக்கு
மாநில நல்லாசிரியர் விருது
வழங்கி கவுரவித்தார்.
திரு. C. நாகராஜு - M.A.,B.Ed.
தலைமையாசிரியர்.
M.A.,B.Ed. படித்துள்ள இவர், தற்போது சூடசந்திரம் PUMS பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார்.
ஆரம்பத்தில்
1999-ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி
ஆசிரியர் பணியில் சேர்ந்து
SG Asst ஆக 7 ஆண்டுகள் சிறப்பாக
பணியாற்றிய இவருக்கு
2006-ம் ஆண்டு ஜுன் 26-ம் தேதி
தொடக்கப்பள்ளி தலைமையாசிரியராக
பணி உயர்வு பெற்றுள்ளார்.
2008-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதியன்று
சூடசந்திரம் நடுநிலைப்பள்ளிக்கு தலைமையாசிரியராக பணி உயர்வு பெற்றார்.
அதே பள்ளியில் கடந்த 18 ஆண்டுகளாக தலைமையாசிரியராக சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
இவரின் பணிக்காலத்தில்...
சூடசந்திரம் PUMS நடுநிலைப்பள்ளியின் வளர்ச்சிக்காக அரிய பல சேவைகளை ஆற்றியுள்ளார்.
அவற்றில் சில...
1. நன்கொடையாளர் மூலமாக ரூ.5லட்சம் மதிப்புள்ள 10 சென்ட் நிலம் சூடசந்திரம் அரசுப்பள்ளிக்கு கிடைக்க முயற்சி மேற்கொண்டார்.
2. ஏதர் நிறுவனம் மூலமாக ரூ.1லட்சம் மதிப்புள்ள மேசை, நாற்காலிகளை சூடசந்திரம் அரசுப்பள்ளிக்கு நன்கொடையாக பெற்றார்.
3. டிவிஎஸ் நிறுவனம் மூலமாக ரூ.30லட்சம் மதிப்பில் சூடசந்திரம் அரசுப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம், கழிவறை கட்டிடம், குடிநீர் வசதி, பவர்பிளாக் வளாகம் அமைத்து, அரசுப்பள்ளியின் தரத்தை தனியார் பள்ளிக்கு நிகராக உயர பாடுபட்டார்.
4. ஜீஜனகுப்பம் கிராமத்தில் 20 சென்ட் நிலம் வாங்கி புதிய தொடக்கப்பள்ளியை ஆரம்பிக்க
அரிய முயற்சி மேற்கொண்டார்.
இவரின் சிறப்பான பணியை பாராட்டி
2026-27-ம் கல்வியாண்டில்
டாக்டர் ராதாகிருஷ்ணன்
நல்லாசிரியர் விருது
வழங்கப்பட்டுள்ளது.
------------------------------------------------------