அண்ணல் அம்பேத்கர்
வேளாண் உதவித்திட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
வேளாண்மை பொறியியல் துறை மூலம்
தனிநபர் ஆதிதிராவிடர்,
பழங்குடியினர் விவசாயிகள்
மானியத்தில் ஆழ்துளை அல்லது
குழாய்க் கிணறுகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. அக். 06. –
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
தனிநபர் ஆதிதிராவிடர்,
பழங்குடியினர் விவசாயிகள்
வேளாண்மை பொறியியல் துறை மூலம்
மானியத்தில் ஆழ்துளை அல்லது
குழாய்க் கிணறுகள் அமைக்க
விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது,
வேளாண்மை பொறியியல் துறை மூலமாக
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கி
நிகர சாகுபடி பரப்பினை அதிகரிக்க
2026-27 ஆம் ஆண்டு
வேளாண் நிதி நிலை அறிக்கையில்
மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களால்
அண்ணல் அம்பேத்கர்
வேளாண் உதவித் திட்டம்
என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு
ஆதிதிராவிடர், பழங்குடியினர்
விவசாயிகளுக்கு ஆழ்துளை அல்லது
குழாய்க் கிணறுகள் அமைத்திட
அரசு மானியம் தரப்படவுள்ளது.
சிறு, குறு, பெண் விவசாயிகளுக்கு
100 சதவீத மானியத்தில் ஒரு விவசாயிக்கு
அதிகபட்மாக ரூ.8.00 லட்சம் மானியமாக
வழங்கி இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
திட்டத்தில் பயன் பெற தகுதிகள்:
1. குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலம்
(ஒரே இடத்தில் தொடர்ச்சியாக)
விண்ணப்பதாரரின் பெயரில்
இருத்தல் வேண்டும்.
கூட்டுப் பட்டாதாரராக
இல்லாதிருத்தல் வேண்டும்.
2. நிலநீர் ஆய்வு,
ஆழ்துளை அல்லது குழாய்க் கிணறு அமைத்தல்
(Total Approved Cost) மற்றும்
சூரியசக்தி பம்ப்செட்
அல்லது
நிலநீர் ஆய்வு,
ஆழ்துளை அல்லது குழாய்க் கிணறு அமைத்தல்,
மின் இணைப்பு தட்கல் சேவை.
மின் மோட்டார் பம்புசெட்டு மற்றும்
உபகரணங்கள் சேர்த்து அலகுத் தொகையான
ரூ.8 லட்சத்திற்குக் கூடுதலாகத் தேவைப்படுமாயின்,
அக்கூடுதல் தொகையினை
அந்த விவசாயியே
ஒப்பந்ததாரரின் பெயரில்
வங்கி கேட்பு வரைவோலையாக
(Demand Draft) எடுத்து
உதவி செயற்பொறியாளர்
(வேளாண்மைப் பொறியியல்)
அலுவலகத்தில் சமர்ப்பித்த பின்னரே
பம்புசெட்டு நிறுவும் பணிகள்
மேற்கொள்ளப்படும்.
இதற்கு உடன்படும் விவசாயிகளுக்கே
இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட ஆழ்துளை அல்லது குழாய்க் கிணற்றிலிருந்து கிடைக்கப்பெறும் நீரினை விவசாயி முறையாகப் பயன்படுத்திட வேண்டி நுண்ணீர்ப் பாசன அமைப்பு தமிழ்நாடு வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் மூலமாக ஏற்படுத்திட வேண்டும்.
இத்திட்டத்தின் மூலமாக ஆழ்துளை அல்லது குழாய்க் கிணறு அமைத்து, நீர் இறைக்கும் அமைப்பு நிறுவப்பட்ட பின்னர். பணிகள் நல்ல முறையில் மேற்கொள்ளப்பட்டு, இயங்குவதற்கான சான்றும், கிணற்றிலிருந்து கிடைக்கப்பெறும் நீரினை விவசாயம் தவிர்த்து இதர பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தக் கூடாது.
கட்டமைப்புகளை கவனமுடன் பயன்படுத்துதல் மற்றும் குறைந்தது 5 வருடங்களுக்கு அந்நிலத்தினை வேறு யாருக்கும் விற்பனை செய்யக் கூடாது.
எனவே. மேற்படி திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள விவசாயியின்
புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம்,
சாதிச் சான்றிதழ்,
ஆதார் அட்டை நகல்,
குடும்ப அட்டை நகல்,
பட்டா சிட்டா அடங்கல்,
நில வரைபடம்
ஆகியவற்றுடன்
செயற்பொறியாளர் அலுவலகம்,
வேளாண்மை பொறியியல் துறை,
மாவட்ட ஆட்சியரக வளாகம்,
கிருஷ்ணகிரி.
போன்: 04342-232959,
உதவி செயற்பொறியாளர் அலுவலகம், வேளாண்மை பொறியியல் துறை, மாவட்ட ஆட்சியரக வளாகம், கிருஷ்ணகிரி
மற்றும்
உதவி செயற்பொறியாளர் அலுவலகம், வேளாண்மை பொறியியல் துறை. சென்னத்தூர் அஞ்சல், சாணசந்திரம். இராயக்கோட்டை ரோடு ஓசூர்.
ஆகிய அலுவலகங்களை
தொடர்பு கொள்ளலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
----------------------------------------------.