கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ்
உதவித்தொகை பெறும் பயனாளிகள்,
வங்கிக் கணக்குடன் ஆதார் எண்
இணைக்கப்படாமல் இருந்தால்,
வங்கியை அணுகி ஆதார் எண்ணை
வங்கிக் கணக்குடன்
இணைத்துக்கொள்ள வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச. தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. செப். 25. –
சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ்
உதவித்தொகை பெறும் பயனாளிகள்,
வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்படாமல் இருந்தால்,
வங்கியை அணுகி ஆதார் எண்ணை
வங்கிக் கணக்குடன்
இணைத்துக்கொள்ள வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
சமூக பாதுகாப்புத் திட்டதின் கீழ்
உதவி தொகை பெறும் பயனாளிகளுக்கு
இந்திய அரசின் அறிவுறுத்தலின்படி,
செப்டம்பர் மாதம் முதல்
ஆதார் அடிப்படையிலான
பணப்பரிவர்த்தனை
அமல்படுத்தப்பட்டுள்ளது.
எனவே,
இம்மாதம் முதல் பயனாளிகளுக்கான
நிதியுதவி, அவர்களின் ஆதார் எண்ணுடன்
இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில்
வரவு வைக்கப்படும்.
அனைத்து பயனாளிகளுக்கும்
அரசின் முறையான நடவடிக்கைகள் மூலம்
நிதியுதவி தடையின்றி சென்றடைவதை
உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வங்கிக் கணக்குடன் ஆதார் எண்
இதுவரை இணைக்கப்படாத பயனாளிகள்
தங்களது வங்கியை அணுகி
ஆதார் இணைப்பை மேற்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம்
அல்லது
உதவி தேவைப்பட்டால்,
மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள
தனித் துணை ஆட்சியர்
(ச.பா.தி) அலுவலகம்
மற்றும்
ஒவ்வொரு வட்டாட்சியர்
அலுவலகத்திலும் உள்ள
தனி வட்டாட்சியர் (ச.பா.தி)
அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள
உதவி மையங்களை பயனாளிகள் அணுகலாம்.
அங்கு தேவையான வழிகாட்டுதலும்
உதவியும் வழங்கப்படும்.
ஒவ்வொரு பயனாளிக்கும்
நிதியுதவி எவ்வித இடையூறும் இன்றி
சீராக சென்றடைவதை உறுதி செய்வதில்
அரசு உறுதியாக உள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார். இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்துள்ளார்.
----------------------------------------------.