தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி
மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)
மற்றும் தகவல் தொடர்பு
தொழில்நுட்பக் கழகம் (ICT Academy) இணைந்து
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்
இளைஞர்களுக்கு மென் பொருள் சார்ந்த பயிற்சிகள்
வழங்கப்படவுள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார். இஆப,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. அக். 11. -
தமிழ்நாடு ஆதிதிராவிடர்
வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்
(தாட்கோ) மற்றும்
தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கழகம்
(ICT Academy) இணைந்து
ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் இளைஞர்களுக்கு
சென்னை மாவட்டத்தில்
மென் பொருள் வடிவமைப்பாளர்,
வலைதளம் வடிவமைப்பாளர்
மற்றும் பயன்பாட்டு மென்பொருள்
மேம்பாட்டாளர் பயிற்சியும்,
கோயம்புத்தூர் மாவட்டத்தில்
மென் பொருள்,
வலைதளம் வடிவமைப்பாளர்,
பயன்பாட்டு மென்பொருள் மேம்பாட்டாளர்,
தரவுப் பகுப்பாய்வாளர்,
நுண்நிதி நிர்வாகம்,
காப்பீட்டு முகவர் பயிற்சியும்,
மதுரை மாவட்டத்தில்
தரவுப் பகுப்பாய்வாளர்,
மென் பொருள் வடிவமைப்பாளர்,
நுண்நிதி நிர்வாகம்,
காப்பிட்டு முகவர்
போன்ற பயிற்சிகள்
வழங்கப்படவுள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார். இஆப,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களின் மேம்பாட்டுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் தாட்கோ. மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கழகம் (ICT Academy) இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு,
சென்னை மாவட்டத்தில்
மென் பொருள். வலைதளம் வடிவமைப்பாளர் மற்றும் பயன்பாட்டு மென்பொருள் மேம்பாட்டாளர் பயிற்சியும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில்
மென் பொருள். வலைதளம் வடிவமைப்பாளர், பயன்பாட்டு மென்பொருள் மேம்பாட்டாளர், தரவுப் பகுப்பாய்வாளர், நுண்நிதி நிர்வாகம் மற்றும் காப்பீட்டு முகவர் பயிற்சியும்.
மதுரை மாவட்டத்தில்
தரவுப் பகுப்பாய்வாளர், மென் பொருள் வடிவமைப்பாளர். நுண்நிதி நிர்வாகம் மற்றும் காப்பீட்டு முகவர் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
மென் பொருள் சார்ந்த பயிற்சி பெற
இளங்கலை பொறியியல் மற்றும்
பி.எஸ்.சி கணினி அறிவியல்
ஆகிய பாடங்களில் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
நிதி சார்ந்த பயிற்சிகள் பெற
இளங்கலை வணிகவியல் மற்றும்
இளங்கலை வணிக நிர்வாகவியல்
ஆகிய பாடங்களில் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
இப்பயிற்சியினை பெற
ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினராகவும்.
வயது வரம்பு 18 முதல் 35 வயதிற்குள்ளும்,
மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
இப்பயிற்சி சென்னை, கோயம்புத்தூர்
மற்றும் மதுரை மாவட்டங்களில்
நடைபெறவுள்ளது.
இளைஞர்களுக்கு இப்பயிற்சியினை முழுமையாக முடித்த சான்றிதழ் மற்றும் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தகுதியான நபர்களுக்கு வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும்.
இப்பயிற்சியில் சேருவதற்கு
தாட்கோ இணையதளமான
www.tahdco.com
என்ற முகவரியில் பதிவு செய்து
கொள்ளலாம் என
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார். இ.ஆ.ப,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
------------------------------------------.