பிரதம மந்திரியின்
சூரிய வீடு இலவச மின்சார
திட்டத்தின் கீழ்
அனைத்து வீட்டு மின் இணைப்பு
உரிமையாளர்களும் விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ்குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. அக். 12. –
பிரதம மந்திரியின்
சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின்கீழ்
14.10.2026- ஒசூர் மின்வாரிய
செயற்பொறியாளர் அலுவலகம்,
16.10.2026 - மத்தூர் உதவிச் செயற்பொறியாளர் அலுவலகம்,
22.10.2026 - கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகம்
ஆகிய நாட்களில் நடைபெறும் முகாமிகளில் கலந்துக்கொண்டு பயனடையுமாறு
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சூரிய சக்தியை பயன்படுத்தி வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் திட்டமான
"பிரதம மந்திரியின் சூரிய வீடு
இலவச மின்சார திட்டம்",
மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களால்
29.02.2024 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
மத்திய அரசின் நிதி உதவியுடன்
இத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும்
1 கோடி வீடுகளுக்கு சூரிய தகடுகள் பொருத்தி இலவச மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளது வரை
1011 என்ற எண்ணிற்கு வீட்டு மின் நுகர்வோர் பயனடைந்துள்ளார்.
பிரதம மந்திரியின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்:
> அனைத்து வீட்டு மின் இணைப்பு உரிமையாளர்களும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
> இத்திட்டத்திற்கு வங்கிகள் மூலம் உடனடியாக கடன் பெறலாம்.
இத்திட்டத்தின் செயல்பாடு காலம் 31.03.2027 வரை
இத்திட்டத்திற்கு மத்திய அரசால் மானியம் வழங்கப்படுகிறது.
> இத்திட்டத்தில் தற்போது 05.08.2026 முதல் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கு
மாநில அரசு மானியம் வழங்கப்பட உள்ளது.
1 கிலோவாட்
மத்திய அரசு மானியம் ரூ.30,000/-
1 கிலோவாட்
மாநில அரசு மானியம் ரூ.5,000/-
மொத்த மானியம் ரூ.35,000/-
2 கிலோவாட்
மத்திய அரசு மானியம் ரூ.60,000/-
மாநில அரசு மானியம ரூ.10,000/-
மொத்த மானியம் ரூ.70,000/-
3 கிலோவாட்
அதற்கு மேல் 10 கிலோ வாட் வரை
மத்திய அரசு மானியம் ரூ.78,000/-
மாநில அரசு மானியம் ரூ.22,000/-
மொத்த மானியம் 5.1,00,000/-
இத்திட்டத்தில் மேற்கூறப்பட்ட மானியம் நுகர்வோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக சூரிய திட்ட பணிகள் முடிவுற்ற 7 நாட்களில் இருந்து 30 நாட்களுக்குள் செலுத்தப்படும்.
> 1 கிலோவாட் சூரிய தகடு
ஒரு நாளில் 4 முதல் 5 யூனிட்கள் வரை
உற்பத்தி செய்யும்.
நுகர்வோர் செய்யும் முதலீடு குறுகிய காலத்தில் திரும்ப பெறலாம்.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க
www.pmsuryaghar.gov.in
என்ற இனையதளம் மூலமாக
பதிவு செய்யலாம்.
Seva setu
(பிரதம மந்திரியின் சூரிய வீடு இலவச மின்சார திட்டம்)
முகாம்கள் நடைபெறும்
இடங்கள் / நாள்:
(1).14.10.2026 - ஒசூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம்
(ii) 16.10.2026 - மத்தூர் உதவிச் செயற்பொறியாளர் அலுவலகம்
(ii)22.10.2026-கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகம்
எனவே பொதுமக்கள்
இத்திட்டத்தை பயன்படுத்தி
தங்களது இல்லத்தில் சூரிய தகடுகள்
பொருத்திக்கொள்ள
கேட்டுகொள்ளப்படுகின்றனர்.
மேலும் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தியை
பெருக்கி பசுமையான,
ஒளிமயமான" எதிர்காலத்தை
உருவாக்குவோம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார், இ.ஆ.ப
அவர்கள் தெரிவித்துள்ளார்.
---------------------------------------.