மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள்
மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள்
விவசாயிகளுக்கான
நலத்திட்டங்களை தொடர்ந்து
செயல்படுத்தி வருகிறார் என
மாண்புமிகு
தொழில்துறை அமைச்சர்
செல்வி.ச.கீர்த்தனா.
அவர்கள் தகவல்.
விலையில்லா
கேழ்வரகு
கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும்
நியாயவிலைக் கடைகளில்
அனைத்து அரிசி பெறும்
குடும்ப அட்டைதார்களுக்கு
தலா 2 கிலோ விலையில்லா
கேழ்வரகு வழங்கும் பணிகள்
மாண்புமிகு
தொழில்துறை அமைச்சர்
செல்வி.ச.கீர்த்தனா
அவர்கள் துவக்கி வைத்தார்.
"தாய்மாமன் தங்க மோதிரம்"
திட்டத்தின் கீழ்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
அரசு மருத்துவமனைகள் மற்றும்
ஆரம்ப சுகாதார நிலையங்களில்
பிறந்த 3,319 குழந்தைகளுக்கு
ஒரு கிராம் தங்க மோதிரம்
வழங்கப்பட்டுள்ளது என
மாண்புமிகு
தொழில்துறை அமைச்சர்
செல்வி.ச.கீர்த்தனா
அவர்கள் தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
ரூ.4 கோடியே 38 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பில்
முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து,
212 பயனாளிகளுக்கு
ரூ.1 கோடியே 56 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில்
நலத்திட்ட உதவிகளை
மாண்புமிகு
தொழில்துறை அமைச்சர்
செல்வி.ச.கீர்த்தனா
அவர்கள் வழங்கினார்.
கிருஷ்ணகிரி. அக். 17. –
ரூ.4.38கோடி மதிப்பில்
முடிவுற்ற
திட்டப்பபணிகள் தொடக்கம்
கிருஷ்ணகிரி அவதானப்பட்டி
சிறுவர் பூங்கா,
ஊத்தங்கரை வட்டம், காரப்பட்டு மற்றும்
ஊத்தங்கரை அரசு மேல்நிலைப்பள்ளிகளில்
ரூ.4 கோடியே 38 லட்சத்து
44 ஆயிரம் மதிப்பில்
முடிவுற்ற திட்ட பணிகள்,
ஊத்தங்கரை வேளாண்மை
உற்பத்தியாளர்கள்
கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில்
புதிய நியாயவிலைக் கடைகள்
திறந்து வைத்து,
குடும்ப அட்டைதாரர்களுக்கு
2 கிலோ ராகி வழங்கும் பணிகளை
மாண்புமிகு
தொழில்துறை அமைச்சர்
செல்வி.ச.கீர்த்தனா
அவர்கள்,
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள்,
சட்டமன்ற உறுப்பினர்கள்
திரு.பா.முகுந்தன்
(கிருஷ்ணகிரி) அவர்கள்,
டாக்டர்.நா.இளையராஜா
(ஊத்தங்கரை) அவர்கள்,
ஆகியோர் முன்னிலையில் இன்று (17.10.2026) துவக்கி வைத்து,
ரூ.1.56 கோடி
நலத்திட்ட உதவிகள்
மீன்வளத்துறை,
வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை,
கூட்டுறவுத்துறை மற்றும்
மாவட்ட வழங்கல் துறை,
சார்பாக, 212 பயனாளிகளுக்கு
ரூ.1 கோடியே 56 லட்சத்து
75 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
மாண்புமிகு
தொழில்துறை அமைச்சர்
செல்வி.ச.கீர்த்தனா
அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
சிறுவர்பூங்கா
கிருஷ்ணகிரி அவதானப்பட்டி சிறுவர் பூங்கா மற்றும் படகு இல்லத்தில், சுற்றுலாத்துறை சார்பாக, ரூ.2 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சுற்றுலா வளர்ச்சி பணிகள் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இப்பூங்காவில்,
நுழைவு சீட்டு கட்டிடம்,
நிழற்குடை,
துரித சிற்றுண்டி கடைகள்,
நிலையான படகுத்துறை,
குழ விளையாட்டு உபகரணங்கள்,
நிலச்சீர் அமைப்பு,
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி
மற்றும் விளக்குகள்
அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து,
மீன்வளம் மற்றும்
மீனவர் நலத்துறை
சார்பாக,
பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மாநில தலைமை மீன்வளக் கூட்டுறவு இணையம் லிமிடெட் மூலம், மீனவர் சங்க கூட்டுறவு உறுப்பினர்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில்,
மொத்த தொகை ரூ.6 லட்சம் மதிப்பில்,
ரூ.2.40 லட்சம் மானியத்தில்
8 பயனாளிகளுக்கு
குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய
இரண்டு சக்கர வாகனங்களும்,
வேளாண்மை பொறியியல்
துறை சார்பாக,
வேளாண் இயந்திரமாக்கல் துணை இயக்கத் திட்டம் 2026-27 -ன் கீழ், 9 பயனாளிகளுக்கு
மொத்த தொகை ரூ.18.02 லட்சம் மதிப்பில்,
ரூ.9.97 லட்சம் மானியத்தில்,
பவர் டில்லர்,
பவர் வீடர்,
புல் வெட்டும் இயந்திரம்,
சுழல் கலப்பை,
சூரிய மின்வேலி,
சூரிய கூடார உலர்த்தி
உள்ளிட்ட வேளாண் உபகரணங்களும்,
தோட்டக்கலை மற்றும்
மலைபயிர்கள் துறை சார்பாக
தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ்,
2 பயனாளிகளுக்கு ரூ.60,000 மதிப்பில்
ரூ.30,000 மானியத்தில்
நடமாடும் காய்கறி விற்பனை
வாகனங்களுக்கான
ஆணைகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து,
ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம்,
காரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில்,
பொதுப்பணித்துறை சார்பாக,
நபார்டு திட்டத்தின் கீழ்,
ரூ.98 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பில்
புதியதாக கட்டப்பட்டுள்ள
4 வகுப்பறை கட்டடங்கள்,
ஊத்தங்கரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்
நபார்டு திட்டத்தின் கீழ்,
ரூ.49 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பில்
புதியதாக கட்டப்பட்டுள்ள
2 வகுப்பறை கட்டிடங்களும்,
ஊரக வளர்ச்சி மற்றும்
ஊராட்சித்துறை சார்பாக,
திருவனப்பட்டி மற்றும்
மேட்டுதாங்கல் கிராமங்களில்
15 வது நிதிக்குழு மானியத்தில்,
தலா ரூ.45 லட்சம் மதிப்பில்
ரூ.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள
2 துணை சுகாதார மையக் கட்டடங்கள்
திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகளுக்கு
அக்டோபர் 2026 ஆம் மாதத்திற்கு
கேழ்வரகு 614.537 மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஊத்தங்கரை 2 முழுநேர நியாயவிலைக் கடைக்கு 30CD002PY அக்டோபர் 2026 ஆம் மாதத்திற்கு கேழ்வரகு 1077 கிலோ
ஒதுக்கீடு செய்யப்பட்டு
அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதார்களுக்கு
தலா 2 கிலோ விலையில்லா கேழ்வரகு
வழங்கும் பணிகள்
ஊத்தங்கரை வோளண்மை
உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை
சங்க வளாகத்தில்
துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இது பெண்கள், வளரிளம் பெண்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களின் ஊட்டச்சத்துத் தேவையை நிறைவுசெய்யும் மிக முக்கிய முன்னெடுப்பாக அமையும்.
மேலும்,
சூளகிரி வட்டத்திற்குட்பட்ட
கிருஷ்ணம்மாகொத்தூர் மற்றும்
கெலமங்கலம் ஊராட்சி
ஒன்றியத்திற்குட்பட்ட அன்னை நகர்
ஆகிய இடங்களில்
புதிய நியாயவிலைக்கடைகள்
திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதனால்,
துப்புகானப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த
110 குடும்ப அட்டைதாரர்கள் மற்றும்
அன்னை நகரைச் சேர்ந்த
400 குடும்ப அட்டைதாரர்கள்
பயனடைவார்கள்.
மேலும்,
கூட்டுறவுத்துறை சார்பாக
சிங்கப்பெண்கள் கடன் திட்டம்,
நீண்ட கால கடன்,
ஊரக தொழிற் கடன் மற்றும்
பயிர்கடன்
ஆகிய திட்டங்களின் கீழ்
மொத்தம் 143 பயனாளிகளுக்கு
ரூ.1 கோடியே 32 லட்சத்து
13 ஆயிரம் மதிப்பில்
கடன் உதவிகளும்,
மாவட்ட வழங்கல் துறை சார்பாக,
ஊத்தங்கரை வட்டத்திற்குட்பட்ட
50 பயனாளிகளுக்கு
புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
பெருந்தலைவர் காமராஜர்
காலை உணவுத் திட்டம்
6 முதல் 8-ஆம் வகுப்பு வரை
விரிவுபடுத்தப்பட்டதன் மூலம்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும்
சுமார் 51,413 மாணவ, மாணவிகள்
பயனடைந்து வருகின்றனர்.
இத்திட்டம் மாணவ-மாணவியரின்
ஊட்டச்சத்தை உறுதிசெய்வதோடு,
பள்ளி வருகையையும்
பெரிதும் ஊக்குவித்துள்ளது.
மேலும்,
"தாய்மாமன் தங்க மோதிரம்"
திட்டத்தின் கீழ்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
அரசு மருத்துவமனைகள் மற்றும்
ஆரம்ப சுகாதார நிலையங்களில்
22.06.2026 முதல் 14.10.2026 வரை பிறந்த
3,319 குழந்தைகளுக்கு
ஒரு கிராம் தங்க மோதிரம்
வழங்கப்பட்டுள்ளது.
மேலும்,
பெண்களின் சமூக மற்றும் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும்
"வெற்றிப் பயண திட்டம்" வாயிலாக
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
271 பேருந்துகள் மூலம் 27,39,766 பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநர் கட்டணமில்லாமல் பயணம் செய்துள்ளார்கள்.
மேலும்,
மகளிருக்கான "அண்ணன் சீர்" திட்டத்தின்கீழ் அறிவிக்கப்பட்ட 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் அறிவிப்பும் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.
மேலும், விவசாயிகளின் சுமையைக் குறைக்கும் வகையில்அறிவிக்கப்பட்ட
கூட்டுறவுப் பயிர்க்கடன் தள்ளுபடி
திட்டத்தின் கீழ்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
இதுவரை 29,185 விவசாயிகள்
பயனடைந்துள்ளனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள்
மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.
தமிழகத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் துவக்கப்பட்டு, படித்த இளைஞர்கள், படித்த பெண்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என
மாண்புமிகு
தொழில்துறை அமைச்சர்
செல்வி.ச.கீர்த்தனா
அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.த.மஞ்சுளா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.சூ.உமா மகேஸ்வரி, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் திரு.ஷாஜகான், தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் திருமதி.மலர்விழி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.நடராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி.கீதா ராணி, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திரு.வடிவேலன், மீன்வளத்துறை உதவி இயக்குநர் திரு.இரத்தினம், வேளாண்மை இணை இயக்குநர் செல்வி.உமா, தோட்டக்கலை துறை இணை இயக்குநர் திருமதி.குணவதி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் திருமதி.நிர்மலதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி.ஏஞ்சலின் பொன்ராணி, மாவட்ட சுகாதார அலுவலர் (பொ) மரு.ஜெகநாதன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.மதன் குமார், பொதுவிநியோகத் திட்ட துணைப் பதிவாளர் திரு.ம.சிவகுருநாதன், உதவி செயற்பொறியாளர் திரு.சண்முகநாதன், மாவட்ட சுற்றுலா அலுவலர் திரு.ரா.கார்த்திக், வட்டாட்சியர்கள் திருமதி.ராஜாலட்சுமி, திரு.மோகன், திரு.நடராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.உமாசங்கர், திரு.மகேஷ், திரு.செந்தில், திருமதி.தனம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
-----------------------------------------------------.