"மத்திய அரசு கல்வி நிறுவனங்களான
IIT, IIM, IIIT, NIT
மற்றும்
மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும்
தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள்
2026-27-ம் கல்வி ஆண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைக்கு
விண்ணப்பித்து பயனடையுமாறு
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார், இ.ஆ.ப.,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. செப். 24. –
தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர்
மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள்
2026-27ஆம் கல்வி ஆண்டிற்கான
புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார், இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு
மற்றும்
பிற மாநிலங்களில் உள்ள
மத்திய அரசு கல்வி நிறுவனங்களான
IIT,
IIM,
IIIT,
NIT
மற்றும்
மத்திய பல்கலைகழகங்களில்
பட்டப்படிப்பு / பட்ட மேற்படிப்பு பயிலும்,
குடும்ப ஆண்டு வருமானம்
ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள
BC,MBC/DNC மாணவர்களுக்கு,
கற்பிப்பு கட்டணம்,
சிறப்பு கட்டணம்,
தேர்வு கட்டணம்
மற்றும்
இதர கட்டாய கட்டணங்கள்
அல்லது ஆண்டிற்கு அதிகபட்சம்
ரூ.2.00 லட்சம் வரை
கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
மேலும்,
விண்ணப்பங்கள் பெறும் இடங்கள்
பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம்,
சென்னை-5,
மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சீர்மரபினர் நல இயகக்ககம்,
சென்னை-5,
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்
மற்றும்
www.bcw.tn.gov.in
என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
மத்திய /மாநில அரசின் இதர கல்வி உதவித் திட்டங்களில் பயன்பெறும் மாணவர்கள் இத்திட்டத்திற்கு தகுதியற்றவர்கள்.
மேலும்,
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வி நிறுவனம் Bonafide Certificate உடன்
பரிந்துரை செய்து,
சம்பந்தப்பட்ட நலத்துறைக்கு
அனுப்ப வேண்டும்.
Renewal விண்ணப்பங்கள் 31.10.2026-க்குள்.
Fresh விண்ணப்பங்கள் 30.11.2026-க்குள்
அனுப்பப்பட வேண்டும்.
Even Semester கட்டண ரசீதுகள் 15.01.2027-க்குள் அனுப்பப்பட வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார், இ.ஆ.ப.,
அவர்கள் தெரவித்துள்ளார்.
------------------------------------------------.