கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் காமராஜ் நகரில்
பாமக
தலைவர் அன்புமணி
அவர்களின்
58-வது பிறந்தநாள் முன்னிட்டு
இலவச மருத்துவ முகாம்
500-க்கும் மேற்பட்டோருக்கு
மருத்துவப் பரிசோதனை மற்றும்
சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.
ஓசூர். அக். 10. –
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்
மருத்துவர் அன்புமணி ராமதாஸின்
58-வது பிறந்தநாளை முன்னிட்டு,
ஓசூர் காமராஜ் நகரில்
இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில் 500-க்கும் மேற்பட்டோர்
பங்கேற்று மருத்துவப் பரிசோதனை
மற்றும் சிகிச்சை பெற்றனர்.
இலவச மருத்துவ முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் காமராஜ் நகர் பகுதியில்
பாட்டாளி மக்கள் கட்சியின்
மேற்கு மாவட்ட துணைச் செயலாளர்
பை. வெங்கடேஷ்.
தலைமையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
பாமக தலைவர்
அன்புமணி ராமதாஸின்
58-வது பிறந்தநாளை
முன்னிட்டு பொதுமக்களுக்கு
இலவச மருத்துவச் சேவை வழங்கும்
நோக்கில் முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
500 தொழிலாளர்கள்
பங்கேற்பு
காமராஜ் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் பல்வேறு பணிச்சூழல்களுக்கு இடையே தங்களது உடல்நலத்தைப் பரிசோதித்துக் கொள்வதற்கு போதிய நேரம் ஒதுக்க முடியாத நிலை இருப்பதால்,
அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த முகாம் நடத்தப்பட்டது.
இந்த முகாமில் பங்கேற்ற
500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்
மற்றும் பொதுமக்களுக்கு
மருத்துவப் பரிசோதனைகள்
மேற்கொள்ளப்பட்டன.
உடல்நலத்தைப் பாதுகாப்பதன் அவசியம்
குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், நோய்களை ஆரம்ப நிலையிலேயே
கண்டறிந்து உரிய சிகிச்சை பெறுவதற்கு இதுபோன்ற மருத்துவ முகாம்கள்
உதவியாக இருக்கும் என
ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்த இலவச மருத்துவ முகாமில்
பசுமைத் தாயகம்
மாநில துணைச் செயலாளர்
முனிசேகர்,
பசுமைத்தாயகம் மாவட்ட செயலாளர்
சத்திய குமார்,
பசுமைத்தாயகம்
மாவட்ட துணை தலைவர்
சின்னசாமி முனுசாமி,
முருகேசன், ஜெகநாதன், வாசுதேவன், சத்திய, வேலு, சசிகுமார், ஜீவா,
மாவட்ட அமைப்பு செயலாளர்
விஸ்வநாதன்,
ஊடகப்பிரிவு
மாதேஷ்,
பசுமைத்தாயகம்
பார்த்தசாரதி
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
----------------------------------------------.