கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட
மூக்கண்டப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளியில்,
2026–2028 ஆம் ஆண்டிற்கான
பள்ளி மேலாண்மைக் குழு
மறுகட்டமைப்புக் கூட்டம்
பார்வையாளராக
பேடரப்பள்ளி அரசு நடுநிலைப் பள்ளி
தலைமை ஆசிரியர்
திரு. பொன் நாகேஷ்
அவர்கள் பங்கேற்பு
ஓசூர். செப். 19. –
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட
மூக்கண்டப்பள்ளி
அரசு தொடக்கப்பள்ளியில்,
2026–2028 -ம் ஆண்டிற்கான
பள்ளி மேலாண்மைக் குழு
மறுகட்டமைப்புக் கூட்டம்
19.09.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.
இப்பள்ளியில்
எல்கேஜி முதல் 5-ம் வகுப்பு வரை
மாணவ, மாணவிகள்
கல்வி பயின்று வருகின்றனர்.
பள்ளியின் கல்வித் தரத்தை
மேம்படுத்துதல்,
மாணவர்களின் அடிப்படை தேவைகளை
நிறைவேற்றுதல்
உள்ளிட்ட பல்வேறு பணிகளில்
பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின்
பங்களிப்பை அதிகரிக்கும் வகையில்
பள்ளி மேலாண்மைக் குழு
செயல்பட்டு வருகிறது.
பள்ளி மேலாண்மைக் குழு
மறுகட்டமைப்பு கூட்டம்
2026-28-ம் ஆண்டிற்கான
பள்ளி மேலாண்மைக் குழுவின்
மறுகட்டமைப்பு கூட்டம்
செப். 19-ம் தேதியன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு
தலைமை ஆசிரியர்
திரு.அப்பையப்பா
அவர்கள் தலைமை வகித்தார்.
ஆசிரியர்
திருமதி. தமிழரசி
அவர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
மறுகட்டமைப்பு கூட்டத்தின்
சிறப்பு பார்வையாளராக
பேடரப்பள்ளி அரசு நடுநிலைப் பள்ளி
தலைமை ஆசிரியர்
திரு.பொன் நாகேஷ்
அவர்கள் கலந்து கொண்டு
சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து புதிய உறுப்பினர்களுக்கு
சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
ஆசிரியர் பயிற்றுநர்
திருமதி. காயத்ரி
அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்த மறுகட்டமைப்பு கூட்டத்தில்
12 பெற்றோர் உறுப்பினர்கள்,
3 முன்னாள் மாணவ பெற்றோர் உறுப்பினர்கள்,
1 சுய உதவிக்குழு பெற்றோர் உறுப்பினர்,
1 முன்னாள் மாணவர் (பொது),
உள்ளாட்சி அமைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள்
திரு. சசிதேவ்,
திரு. மாதேஷ்,
கல்வியாளர்
திரு. சிவராம்,
குழுத் தலைவி
திருமதி. கவிதா,
துணைத் தலைவர்
திரு. ஆனந்த் பாபு,
தலைமை ஆசிரியர்
திரு.அப்பையப்பா
மற்றும்
ஆசிரியர் பிரதிநிதி
திருமதி. தமிழரசி
உள்ளிட்ட மொத்தம் 24 பேர் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை
பள்ளி தலைமை ஆசிரியர்
திரு.அப்பையப்பா
அவர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தார்.
மேலும் ஆசிரியர்கள்
புஷ்பா, ராதாலட்சுமி,
சுஜாதா, ஷீலா,
மரிரெட்டி, ருக்குமணி,
வசந்தி, சுமதி,
திவ்யா, பாரதி, ரம்யா
மற்றும்
300 க்கும் அதிகமான பெற்றோர்
கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நன்றியுரை
நிகழ்ச்சியின் நிறைவில்
திருமதி. புஷ்பா
அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
மூக்கண்டப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளியில் தற்போது சுமார் 525 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.
பள்ளி மேலாண்மைக் குழுவின் புதிய நிர்வாகம் மூலம் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
--------------------------------------------------------.