மூன்று வயதான ஆதரவற்றோருக்கு
உதவிக்கரம் நீட்டிய
மாவட்ட ஆட்சித்தலைவருக்கு
பாராட்டு
பர்கூர் ஒன்றியம் புளியம்பட்டி ஊராட்சி
வடமலம்பட்டி பயணியர் பேருந்து நிழற் கூடத்தில் ஆதரவின்றி தங்கி இருந்த
3 வயதான நபர்களை மீட்டு
மருத்துவ சிகிச்சை வழங்கியப்பின்பு
முதியோர் காப்பகத்தில் சேர்க்க உத்தரவிட்ட
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு. ச. தினேஷ்குமார். இ.ஆ.ப ,
அவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு.
கிருஷ்ணகிரி. செப். 17. -
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர்
திரு. ச. தினேஷ் குமார்.இ.ஆ.ப
அவர்கள் 16.9.2026-ம் தேதியன்று
உங்களைத் தேடி உங்கள் ஊரில்
திட்டத்தின் கீழ்
போச்சம்பள்ளி வட்டத்தில் ஆய்வு
மேற்கொண்டார்.
3 வயதான நபர்கள் மீட்பு
அப்போது பர்கூர் ஒன்றியம்
புளியம்பட்டி ஊராட்சி வடமலம்பட்டி
பயணியர் பேருந்து நிழற் கூடத்தில்
ஆதரவின்றி தங்கி இருந்த
3 வயதான நபர்களை மீட்டு
அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வழங்கிய பின்பு
முதியோர் காப்பகத்தில் சேர்க்க
மாவட்ட ஆட்சித்தலைவர்
துறை சார்ந்த அலுவலர்களுக்கு
அறிவுரை வழங்கினார்.
மாவட்ட ஆட்சித்தலைவரின்
உத்தரவின் பேரில்
ஆதரவின்றி தவித்து வந்த
3 நபர்களும் உடனடியாக மீட்கப்பட்டு,
ஆம்புலன்ஸ் மூலமாக
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை
வழங்கப்பட்டு வருகிறது.
சிகிச்சைக்குப்பின்பு 3 பேர்களையும் முதியோர் காப்பகத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கையில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நன்றி
பாராட்டு
மாவட்ட ஆட்சித்தலைவரின்
மனிதநேயமிக்க இச்செயலுக்கு
3 வயதானவர்களும் தங்களுடைய நன்றியை தெரிவித்தனர்.
பொதுமக்களும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டனர்.
--------------------------------------------.