ஆரோக்கிய அன்னை
பிறந்த நாள் விழா
பெரிய தேர் பவனி
மத்திகிரி நூற்றாண்டுகள்
பழமை வாய்ந்த
பாரம்பரிய புனித ஆரோக்கிய
அன்னை ஆலயத்தில்
ஆரோக்கிய அன்னை
பிறந்த நாள் விழா
பெரிய தேர் பவனி –
தருமபுரி
மறை மாவட்ட ஆயர்
பங்கேற்பு
ஆயிரக்கணக்கான
பக்தர்கள் பங்கேற்பு.
ஓசூர். செப்டம்பர். 9. -
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
மத்திகிரியில் அமைந்துள்ள
நூற்றாண்டுகள் பழமையான
பிரசித்திப்பெற்ற பாரம்பரிய
புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில்
ஆரோக்கிய அன்னையின்
பிறந்தநாள் விழா
சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவை முன்னிட்டு
சிறப்பு திருப்பலியுடன்
பெரிய தேர் பவனி நடைபெற்றது.
நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த
புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்
மத்திகிரியில் 1924-ம் ஆண்டு கட்டப்பட்டுள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் 8-ம் தேதியன்று புனித ஆரோக்கிய அன்னையின் பிறந்தநாள் விழா தேர் பவனியுடன் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கமாகும்.
நடப்பாண்டில் ஆரோக்கிய அன்னையின்
பிறந்த நாள் விழாவை முன்னிட்டு
கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதியன்று
அரூர் மறை வட்டம்
பொம்மிடி பங்குதந்தை
அருட்பணி ஜாக்சன் லூயிஸ்
தலைமை வகித்து மாதா கொடியேற்றி
விழாவை தொடங்கி வைத்தார்.
சிறிய தேர் பவனி
அன்று முதல் பாரம்பரிய ஆலயம் உட்பட
இரு ஆலயங்களிலும் தினமும்
நவநாள் திருப்பலி,
சிறப்பு மறையுரை,
தியானம் மற்றும்
ஆலயத்தைச் சுற்றி சிறிய தேர் பவனி
நடைபெற்று வந்தது.
தேர்த்திருவிழா
ஆரோக்கிய அன்னையின்
பிறந்தநாள் விழாவான
செப்டம்பர் 8-ம் தேதி அன்று
பெரிய தேர்த்திருவிழா நடைபெற்றது.
இந்த தேர்த்திருவிழாவை முன்னிட்டு
புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில்
காலை 9 மணிக்கு நடந்த
ஆடம்பர திருவிழா திருப்பலியில்
தருமபுரி மறை மாவட்ட ஆயர்
முனைவர்
லாரன்ஸ் பயஸ்
அவர்கள்
தலைமை வகித்து திருவிழா திருப்பலி, மற்றும்
சிறப்பு மறையுரை ஆற்றினார்.
உறுதிப் பூசுதல்
ஆயரிடம் மறைக்கல்வி மாணவ, மாணவிகள்
உறுதி பூசுதல்
பெற்றுக்கொண்டனர்.
பெரிய தேர் பவனி
மாலை 6.00 மணிக்கு
அருட்பணி அருள் ஜோதி
அவர்கள் தலைமையில்
வேண்டுதல் தேர் திருப்பலி,
சிறப்பு மறையுரை மற்றும்
இரவு 7.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட
ஆரோக்கிய அன்னையின் பெரிய தேர் பவனி நடைபெற்றது.
இதில் ஓசூர் மறைவட்ட முதன்மை குரு
அருட்பணி எஸ். பெரியநாயகம்
புனித ஆரோக்கிய அன்னை ஆலய பங்குத்தந்தை
அருட்பணி போஸ்கோ மதலை முத்து,
ஆகியோர் பங்கேற்றனர்.
உலக உருண்டை வடிவிலான
அழகிய தேர்
வண்ண மலர்கள் மற்றும்
மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த
உலக உருண்டை வடிவிலான
அழகிய தேரில்
புனித ஆரோக்கிய அன்னை
எழுந்தருளி பக்தர்களுக்கு
அருள் பாலித்தார்.
கேரளம் செண்டை மேளம் முழங்க வானவேடிக்கையுடன் புறப்பட்ட தேர்பவனி
மத்திகிரி நேதாஜிநகர் சாலை,
தேன்கனிக்கோட்டை சாலை,
பழைய மத்திகிரி சாலை
வழியாக பயணித்து இறுதியில்
பழைய மத்திகிரி
குதிரைப் பாளையத்தில் உள்ள
நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த
பாரம்பரிய புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நிறைவடைந்தது.
இந்த தேர் பவனியில்
அருட்சகோதரிகள்,
பங்கு பேரவை,
அன்பிய பொறுப்பாளர்கள்,
பங்கு இளையோர்,
பக்த சபைகள், மற்றும்
ஆயிரக்கணக்கான பக்தர்கள்
கலந்து கொண்டனர்.
விழாவை முன்னிட்டு
புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்
வண்ண விளக்குகளால்
அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அறுசுவை உணவு
புனித ஆரோக்கிய அன்னை பிறந்தநாள்
தேர்த்திருவிழா முன்னிட்டு அனைவருக்கும்
பாரம்பரிய ஆலயத்தில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
---------------------------------------------.