கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
மாவட்ட வள பயிற்றுநர்
காலிப்பணியிடத்திற்கு
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்
21.10.2026 -க்குள் விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. அக். 10. -
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
மாவட்ட வள பயிற்றுநர்
காலிப்பணியிடத்திற்கு
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்
21.10.2026 -க்குள் விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் உள்ளாட்சி அமைப்பு நிறுவனங்கள் மற்றும் சமூக அடிப்படையிலான அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினை முழுமையாக்கும் திட்டப் பணியின் இரண்டாம் கட்ட செயல்பாடுகளுக்காக காலியாகவுள்ள மாவட்ட வளப்பயிற்றுநர் தேர்வு செய்யப்படவுள்ளது.
மாவட்ட வள பயிற்றுநர்.
1. பாலினம்: பெண்கள் (சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை)
2. வயது: 30-45 (01.06.2026 அன்றுள்ளபடி)
3. தகுதி: ஏதேனும் முழு நேரக்கல்வி முறையில் முதுகலை படிப்பில் ஒரு பட்டம்
4. அனுபவம்: 4 வருடங்கள்
மாவட்ட வளப்பயிற்றுநருக்கான
கூடுதல் தகுதிகள் பின்வருமாறு
1. மொழி: தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுத, பேச தெரிந்திருத்தல்.
2. திறன்: தகவல் பரிமாற்றத்தில் தகுந்த திறன், ஒருங்கிணைப்பு,
மனித உறவுகளை பேணுவதில் ஆற்றல்,
கைபேசி செயலிகளை கையாள்வது,
கணினியில் Word, Excel இணைய பயன்படுத்துதலில்,
போதிய அறிவு பெற்றிருத்தல் அவசியம்.
மாவட்ட வளப்பயிற்றுநருக்குரிய
தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள்
இணை இயக்குநர் / திட்ட இயக்குநர்,
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், (மகளிர் திட்டம்)
அறை எண்: 11,
ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும்
ஊராட்சி துறை அலுவலக வளாகம்,
மாவட்ட ஆட்சியரகம்,
கிருஷ்ணகிரி- 635 115
என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ
அல்லது நேரடியாகவோ
21.10.2026 மாலைக்குள் விண்ணப்பத்துடன்
தகுதி குறித்து சுய சான்றிட்ட
நகல்களுடன் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
மாவட்ட வளப்பயிற்றுநர் எழுத்துத் தேர்வு, நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.
மாவட்ட வளப்பயிற்றுநரின் பொறுப்பு திட்டம் சார்ந்து 24 மாதகால வரையறை கொண்டதாகும். மேலும் விபரங்களுக்கு
https://tncdw.org
என்ற இணையதளத்தை அணுகலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
-----------------------------------------------------.