கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி பிருந்தாவன் நகரில்
தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள்
வளர்ச்சிக் கழகம்
சென்னை அண்ணாசாலை
பூம்புகார் விற்பனை நிலையம் சார்பில்
மாபெரும் கைவினைப்பொருட்கள்
கண்காட்சி மற்றும் விற்பனை
ஓசூர் சார் ஆட்சியர்
திருமதி. ஆக்ரித்தி சேத்தி IAS.
அவர்கள்
தொடங்கி வைத்தார்.
(09.10.2026 முதல் 07.11.2026 வரை
(ஞாயிறு உட்பட 30 நாட்கள் நடைபெறுகிறது).
ஓசூர். அக். 09. –
பூம்புகார்
மாபெரும் கண்காட்சி
தமிழ்நாடு அரசு நிறுவனமான
தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள்
வளர்ச்சிக் கழகம்
சென்னை, அண்ணாசாலையில் இயங்கி வரும் பூம்புகார் விற்பனை நிலையம் சார்பில்
30 நாட்கள் நடைபெறும்
மாபெரும் கைவினைப்பொருட்கள்
கண்காட்சி மற்றும் விற்பனை கூடத்தை
ஓசூர் மாநகராட்சி பிருந்தாவன் நகரில்
ஓசூர் சார் ஆட்சியர்
திருமதி. ஆக்ரிதி சேத்தி, இ.ஆ.ப.,
அவர்கள் அக்டோபர் 9-ம் தேதியன்று
தொடங்கி வைத்தார்.
பூம்புகார்...
என்று பிரபலமாக அறியப்படும்
தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள்
வளர்ச்சி கழகமானது
கைவினைஞர்கள் தயாரிக்கும்
கலைப்பொருட்களை மேம்படுத்துதல், சந்தைப்படுத்துதல் மற்றும்
அவர்களின் வாழ்வாதாரத்தினை
உயர்த்திடுவதை
முக்கிய நோக்கமாக கொண்டு
செயல்பட்டு வருகிறது.
மேலும்,
சிறப்பான படைப்புகளை செய்துவரும்
கைவினைக் கலைஞர்களை
ஊக்குவிக்கும் விதமாக
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு விருதுகள் வழங்குவதுடன்
பாரம்பரிய கைத்திற கலையினை
பாதுகாக்கும் பொருட்டு
இந்நிறுவனம் பல்வேறு பயிற்சி திட்டங்கள்
மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை
நடத்தி வருகின்றது.
மேலும்,
கைவினைஞர்கள் உருவாக்கும்
படைப்புகளை கலை ஆர்வலர்களிடம்
கொண்டு செல்லும் வகையில்
நாடெங்கிலும் பல கண்காட்சிகளை
சிறப்புடன் நடத்தி கொண்டு வருகின்றது.
இதன் ஒரு அங்கமாக
தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள்
வளர்ச்சி கழகம் (பூம்புகார்)
“கைவினைப்பொருட்கள்
கண்காட்சி மற்றும் விற்பனை”
என்ற மாபெறும் கண்காட்சி
09.10.2026 முதல் 07.11.2026 வரை
30 நாட்களுக்கு (ஞாயிறு உட்பட)
PINK உடற்பயிற்சி மையம்,
கைனோ மெடிகேர் சென்டர்,
டேஸ் 7, HIG-I-284,
ஐகான் நிறுவனம் - எதிரில்,
(லஷ்மி சினிமாஸ் அருகில்)
பிருந்தாவன் நகர். ஓசூர்,
தமிழ்நாடு-635109.
என்ற முகவரியில் நடைபெறுகிறது.
இக்கண்காட்சியினை
ஓசூர் சார் ஆட்சியர்
திருமதி. ஆக்ரிதி சேத்தி, இ.ஆ.ப.,
அவர்கள்
09.10.2026 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு
துவக்கி வைத்து சிறப்பித்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில்
சேலம் பூம்புகார்
விற்பனை நிலைய மேலாளர்
திரு.நரேந்திர போஸ்.
மற்றும் மருத்துவர்.
திருமதி. S.சர்மிளா
MBBS,MD,DGO.
மேலாண் இயக்குனர்
GYKNOW Medicare Centre .
ஓசூர் ஆராதனா அறக்கட்டளை நிறுவனர்
சமூக சேவகர் ராதா.
ஆகியோர் உடனிருந்தார்கள்.
இக்கண்காட்சியில்
தனிச்சிறப்பு வாய்ந்த பாரம்பரியமிக்க
கைத்திறப் பொருட்கள்
பார்வைக்கும் விற்பனைக்கும்
வைக்கப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியில்
தமிழ்நாட்டின் பாரம்பரிய
கைவினைப் பொருட்களான
வெண்கலச் சிலைகள்,
பித்தளை விளக்குகள்,
தஞ்சாவூர் ஓவியங்கள்,
தஞ்சாவூர் கலைத் தட்டுகள்,
காகிதக் கூழ் பொம்மைகள்,
மரச் செதுக்கல் வேலைப்பாடுகள்,
களிமண் மற்றும் சுடுமண் பொருட்கள்,
பித்தளைச் சிலைகள்,
பித்தளைச் சிறிய அளவிலான
கலைப்பொருட்கள்,
வெண்மரப் பொருட்கள்,
சஹாரன்பூர் மரப் பொருட்கள்,
நினைவுப் பரிசுகள்
மற்றும் பலவிதமான கைவினைப் பொருட்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.
அனுமதி இலவசம்
இக்கண்காட்சியினை
பார்வையிட அனுமதி இலவசம்
09.10.2026 முதல் 07.11.2026 வரை
தினசரி காலை 10.00 மணி முதல்
இரவு 8.00 மணி வரை (ஞாயிறு உட்பட)
நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு முழுவதிலுமிருந்து
பெறப்பட்ட கலைப்பொருட்களை வாங்கி,
தங்கள் இல்லங்கள்,
அலுவலகங்கள் மற்றும்
வழிபாட்டுத் தலங்களில்
அழகாகக் காட்சிப்படுத்திட
கலை ஆர்வலர்களை
அன்புடன் அழைக்கிறோம்.
-------------------------------------------------.