தீவிரப்படுத்தப்பட்ட எச்.ஐ.வி, எய்ட்ஸ்,
பால்வினை நோய்கள் தடுப்பு குறித்த
விழிப்புணர்வு பிரச்சாரம் -3.0
நிகழ்ச்சிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி. செப். 18. –
பால்வினை நோய்கள்
தடுப்பு குறித்த
விழிப்புணர்வு பிரச்சாரம் -3.0
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்
அலுவலக வளாகத்தில்,
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம்
கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த
எச்.ஐ.வி/எய்ட்ஸ் செயல் திட்டம்
சார்பாக,
தீவிரப்படுத்தப்பட்ட எச்.ஐ.வி, எய்ட்ஸ்,
பால்வினை நோய்கள் தடுப்பு குறித்த
விழிப்புணர்வு பிரச்சாரம் 3.0
நிகழ்ச்சிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் (18.09.2026) துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
எச்.ஐ.வி / எய்ட்ஸ், பால்வினை நோய்கள்
தடுப்பு குறித்த 3.0
(Intensified IEC Campaign 3.0)
12.08.2026 முதல் 12.10.2026 வரை
பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில்,
இன்று (18.09.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தீவிரப்படுத்தப்பட்ட எச்.ஐ.வி. எய்ட்ஸ், பால்வினை நோய்கள் குறித்த
விழிப்புணர்வு பிரச்சாரம்- 3.0"
நடைபெற்றது.
தொடர்ந்து,
எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வு குறித்து
உறுதிமொழியான,
எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை
நோய்த்தொற்று குறித்த
முழுமையான அடிப்படைத் தகவல்களை
அரசு மருத்துவமனைகள் மற்றும்
ஆரம்ப சுகாதார நிலையங்களில்
செயல்படும் நம்பிக்கை மையத்தின்
மூலமாக அறிந்திடுவேன்.
தன்னார்வமாக ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள முன் வருவேன்.
எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொற்றுள்ளோரை அரவணைத்து அவர்களுக்கான
இதர சேவைகளைப் பெறுவதில்
உறுதுணை செய்வேன்.
மேலும், எச்.ஐ.வி, எய்ட்ஸ் தொற்றில்லாத
குடும்பம் மற்றும் சமூகத்தை
உருவாக்க பாடுபடுவேன் என்ற
உறுதிமொழி எடுக்கப்பட்டது.
தொடர்ந்து,
எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் துவக்கி வைக்கப்பட்டு, ஆட்டோக்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகள் ஒட்டியும்,
அரசு கலைக்கல்லூரிகள்
(கிருஷ்ணகிரி (ம) ஒசூர்), பிஎம்சி கல்லூரி, அறிஞர் அண்ணா கல்லூரி மாணவர்களின் flash mob விழிப்புணர்வு குறு நாட்டிய நடனம்,
கலைக்குழுவினர் மூலம் நாட்டுப்புற கலை, நாட்டிய நடனம், ஒயிலாட்டம், கரகாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து,
மாவட்டம் முழுவதும் நடமாடும் நம்பிக்கை மையம் மூலமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அக்டோபர் 12 வரை நடத்துவதற்கு,
பிரச்சார வாகனங்களும், கல்லூரி மாணவர், மாணவியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்ட
"மனித சங்கிலி விழிப்புணர்வு”
ஊர்வலம் துவக்கி வைக்கப்பட்டது.
மேலும்,
ஒருங்கிணைந்த எச்.ஐ.வி. எய்ட்ஸ் செயல் திட்டம் விழிப்புணர்வு பிரச்சாரம் அக்டோபர் 12 வரை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும்
ஆட்டோ ஸ்டிக்கர்,
பள்ளி, கல்லூரி மாணவர்களிடம்
விழிப்புணர்வு கருத்தரங்குகள்,
சுய உதவி குழு உறுப்பினர்களின்
விழிப்புணர்வு கூட்டங்கள்,
ஒருங்கிணைந்த சுகாதார
மருத்துவ முகாம்கள்,
விழிப்புணர்வு வினாடி - வினா,
விழிப்புணர்வு மராத்தான் ஒட்டம்
ஆகிய நிகழ்வுகள் நடைபெற உள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில்,
மாவட்ட சுகாதார அலுவலர்
மரு.ஜெகநாதன்,
வட்டார போக்குவரத்து அலுவலர்
திரு.ஈஸ்வர மூர்த்தி,
மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும்
கட்டுப்பாட்டு அலகு மண்டல திட்ட மேலாளர்
திரு.பாலமுருகன்,
மாவட்ட திட்ட மேற்பார்வையாளர்
திரு.அருள்
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்,
அரசு கலைக்கல்லூரிகள் (கிருஷ்ணகிரி (ம) ஓசூர்), பிஎம்சி கல்லூரி, அறிஞர் அண்ணா கல்லூரி மாணவ, மாணவிகள்,
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,
கிருஷ்ணகிரி மாவட்ட வாகன பழுது பார்ப்போர் நல சங்கம்,
கிருஷ்ணகிரி மாவட்ட எய்ட்ஸ் உள்ளோர் நலச் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
-------------------------------------------------------.