சிஐடியூ
ஒப்பந்த தொழிலாளர்கள்
சிறப்பு மாநாடு
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
ஒப்பந்த தொழிலாளர்கள் சிறப்பு மாநாடு
மதுரை நாடாளுமன்றம் உறுப்பினர்
திரு. சு. வெங்கடேசன்.M.P.
பங்கேற்பு
ஓசூர். செப். 27. –
தொழில் நகரமான ஓசூரில்
சிஐடியூ சார்பில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு
மாத ஊதியமாக ரூ.42 ஆயிரம்
வழங்க வேண்டும் என்பது உட்பட
பல்வேறு கோரிக்கைகளை
நிறைவேற்ற வலியுறுத்தி
ஒப்பந்த தொழிலாளர்கள் சிறப்பு மாநாடு
நடைபெற்றது.
தலைமை உரை
ஓசூர் ரயில் நிலையம் அருகே உள்ள
GYR மண்டபத்தில் செப்.27-ம் தேதியன்று
நடந்த இந்த சிறப்பு மாநாட்டுக்கு
சிஐடியூ மாவட்ட தலைவர்
திரு. B.G. மூர்த்தி
தலைமை வகித்து உரையாற்றினார்.
வரவேற்புரை
சிஐடியூ மாவட்ட செயலாளர்
திரு. N.ஸ்ரீதர்
அனைவரையும் வரவேற்று
உரையாற்றினார்.
சிறப்புரை
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்
திரு. சு. வெங்கடேசன்.M.P.
சிஐடியூ அகில இந்திய துணைத்தலைவர்
திரு. A.சவுந்தர்ராஜன்,
சிஐடியூ மாநிலத்தலைவர்(கர்நாடகா).
திரு. மீனாட்சி சுந்தரம்.
சிஐடியூ மாநில தலைவர்
திரு. G.சுகுமாரன்.
சிஐடியூ மாநில பொதுச்செயலாளர்
திரு. S.கண்ணன்.
சிஐடியூ மாநில துணைத்தலைவர்
திரு. K. விஜயன்.
DREU பொதுச்செயலாளர்
பேபி சகிலா.
ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
திரு. சு.வெங்கடேசன்.M.P.
பேசியதாவது...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
சிறு,குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள்
ஏறக்குறைய 19 ஆயிரம் தொழிற்சாலைகள்
இந்த மாவட்டத்தில் இருக்கிறது.
அதில்
உற்பத்தி துறையில்...
5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
தொழிற்சாலைகளும் ,
சேவை துறையில்...
14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
தொழிற்சாலைகளுமாக
என மொத்தம் 19 ஆயிரம் தொழிற்சாலைகள்
குவிந்துள்ள ஒரு மாவட்டமாக
கிருஷ்ணகிரிமாவட்டம் உள்ளது.
சென்னையில்
தொழில் சார்ந்த வளர்ச்சி என்பது...
ஒரு தேக்கநிலை கொண்ட
வளர்ச்சியாக உள்ளது.
ஆனால்
ஓசூர் பகுதியில்
தொழில் வளர்ச்சி என்பது…கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி என்பது…
அடுத்த கட்ட பாய்ச்சலுக்கான தொழில் வளர்ச்சியாக உள்ளது.
இதற்கு இயற்கையாகவே பல காரணங்கள் அமைந்துள்ளது.
ஓசூர் பகுதி ...
தமிழ்நாடு,
கர்நாடகா,
ஆந்திரா
ஆகிய மூன்று மாநிலங்களின் சங்கமம் ஆகும்
ஒரு பகுதியாகவும்,
அதே நேரத்தில் சுற்றுச்சூழலும் சாதகமாக அமைந்துள்ள ஒரு பகுதியாகவும்
ஓசூர் பகுதி உள்ளது.
இது தொழில் சார்ந்த வளர்ச்சிக்கு
உறுதுணையாக உள்ளது.
சமீபத்தில் ஓசூர் பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள பல முக்கியமான தொழில் நிறுவனங்களின் அறிவிப்புகள் எல்லாம் இதைத்தான் உணர்த்துகிறது.
திரு. சு.வெங்கடேசன்.M.P.
பேசியதாவது...
இந்த ஓசூர் பகுதியின் தொழில் சார்ந்த வளர்ச்சியை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்று ஊக்குவிப்போம்.
19 ஆயிரம் தொழிற்சாலைகள் குவிந்துள்ள ஒரு நகரத்தில் தொழிலாளர்களின் எண்ணிக்கை என்று பார்த்தால்… அரசின் புள்ளி விவரங்களின்படி ஏறக்குறைய 1,88,000 தொழிலாளர்கள் பணியில் உள்ளனர்.
நமது கணக்குகளின்படி 2.50லட்சம் பேர் பணியில் உள்ளனர். இதில் 10 அல்லது 15 சதவீதம் பேர் மட்டுமே நிரந்தர தொழிலாளர்களாக உள்ளனர்.
ஆகவே 1.75லட்சம் ஒப்பந்த தொழிலாளர்கள் குவிந்துள்ள மாவட்டமாக கிருஷ்ணகிரி உள்ளது. இந்த 1.75லட்சம் தொழிலாளர்கள் குவிந்துள்ள இந்த மாவட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் காணப்படுகிறது.
அது தொழில் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல… தொழிலாளர் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல… வணிக உரிமை சார்ந்த பிரச்சனைக்கே ஒரு சிவப்பு மண்டலமாக ஓசூர் பகுதி உள்ளது.
ஏனெனில் இந்த 1.75லட்சம் தொழிலாளர்களுக்கும் சட்டம் வழங்கி உள்ள தகுதியும், உரிமையும் தினசரி எப்படி மீறப்படுகிறது, பறிக்கப்படுகிறது, நசுக்கப்படுகிறது என்பதை
சிஐடியூ மாநிலத்தலைவர் சுகுமாரன் அவர்கள்
இங்கு குறிப்பிட்டு பேசினார்.
தொழிலாளர்களின் உரிமையை காப்பாற்றும் கடமை அரசுக்கு இருக்கிறதோ… இல்லையோ… ஆனால் சிஐடியூ தொழிற்சங்கத்திற்கு தொழிலாளர்களின் உரிமையை காப்பாற்றும் கடமை இருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டு பிரதான கோரிக்கைகள்
மாத ஊதியம் குறைந்த பட்சம் ரூ.42,000 - மாத ஊதியமாக வழங்க வேண்டும்.
சம வேலைக்கு சம ஊதியம் மற்றும் ஆண்டுக்கு 10% ஊதிய உயர்வு வழங்கவேண்டும்.
பெண்கள் நலனை மேம்படுத்திட சுகாதாரமான கழிப்பறை, ஓய்வு அறை மற்றும் விசாகா வழிகாட்டுதல்படி உள்புகார் கமிட்டிகளை அமைக்க வேண்டும்.
போனஸ், வீட்டு வாடகைப்படி மற்றும் போக்குவரத்து சலுகைகளை வழங்க வேண்டும்.
20 நாட்கள் பணி புரிந்தால் 1நாள் ஊதியத்துடன் விடுப்பு மற்றும் தேசிய பண்டிகை கால ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும்.
என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் இந்த சிறப்பு மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
இந்த சிறப்பு மாநாட்டில்
திரு. S. வாசுதேவன்,
திரு. S. பீட்டர்,
திரு. லெனின் முருகன்,
திரு.M.குருநாதன்,
திரு.K.காமராஜ்,
திரு.S. ஸ்டாலின் ராஜா,
திரு.K. மாதவன்,
திரு.K.பிரபாகரன்,
திருமதி.சுஜாதா,
திரு.K. குணசேகர்,
திரு.G.சீனிவாசன்,
மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள், கலந்து கொண்டனர்.
நன்றியுரை
சிஐடியூ மாவட்ட பொருளாளர்
திரு. G. ஸ்ரீதரன்
நன்றி உரையாற்றினார்.
---------------------------------------------------------------------------------------.
ஓசூர் 16-வது புத்தகத்
திருவிழாவுக்கு அழைப்பு.
ஓசூர் மாநகராட்சியில்
2027-ம் ஆண்டு நடைபெறும்
16-வது ஓசூர் புத்தகத் திருவிழாவில் பங்கேற்க
சிஐடியூ அகில இந்திய துணைத்தலைவர்
திரு. A.சவுந்தர்ராஜன்.
மற்றும் சிஐடியூ நிர்வாகிகளுக்கு புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள்
திரு.சேதுராமன்,
திரு.பாலகிருஷ்ணன்
ஆகியோர் அழைப்பிதழ் வழங்கினர்.
--------------------------------------