கிருஷ்ணகிரி மாவட்ட
ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்,
நிதி ஆயோக் மற்றும்
தேசிய நகர்புற விவகாரங்கள் நிறுவனம்
சார்பாக
சிறிய நகரங்களுக்கான முன்னெடுப்பு,
ஒசூர் மண்டலப் பொருளாதார மற்றும்
இடஞ்சார்ந்த மேம்பாடு குறித்த
ஆய்வுக் கூட்டம்
கிருஷ்ணகிரி. அக். 10. –
நிதி அயோக்
ஆய்வுக்கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்,
நிதி அயோக் மற்றும்
தேசிய நகர்புற விவகாரங்கள்
நிறுவனம் சார்பாக
சிறிய நகரங்களுக்கான முன்னெடுப்பு,
ஒசூர் மண்டலப் பொருளாதார மற்றும்
இடஞ்சார்ந்த மேம்பாடு குறித்த
ஆய்வுக் கூட்டம்
டெல்லியில் இருந்து
காணொளி காட்சி வாயிலாக
நிதி ஆயோக் திட்ட இயக்குநர்
திருமதி.அன்னா ராய்.
அவர்கள் தலைமையில்,
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் முன்னிலையில் இன்று (09.10.2026) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்ததாவது:
இந்தியா ஒரு விரைவான நகர்ப்புற மாற்றத்திற்கு உட்பட்டு வருகிறது.
சீரான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான நகர்ப்புற எதிர்காலத்தை வடிவமைப்பதில் சிறிய மற்றும் நடுத்தர நகரங்களின் பங்கு நாளுக்கு நாள் மிகவும் முக்கியமானதாகி வருகிறது.
இந்தச் சூழலில், நிதி ஆயோக், NIUA உடன் இணைந்து, சிறிய நகரங்களின் பொருளாதார, உள்கட்டமைப்பு மற்றும் நிறுவன அடித்தளங்களை வலுப்படுத்துவதன் மூலம் சமச்சீரான பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்கும் சிறிய நகரங்கள் திட்டத்தில் (SCI) செயல்பட்டு வருகிறது.
இந்த ஆய்வானது பல்வேறு உள்ளூர் சூழல்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கக்கூடிய மற்றும் சிறிய நகரங்களின் பொருளாதார திறனை முழுமையாக வெளிக்கொணரக்கூடிய ஒரு பிரதியெடுக்கத்தக்க திட்டமிடல் கட்டமைப்பை உருவாக்க முயல்கிறது.
மாதிரி நகரம்
ஓசூர்
இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக இரண்டு மாதிரி நகரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் ஒசூரும் ஒன்றாகும்.
அதன் வலுவான உற்பத்தித் தளம் மற்றும் குறிப்பிடத்தக்க வளர்ச்சித் திறனுடன், ஒசூர் பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கவும், பரந்த தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்தவும் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து,
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள்
கையேடு
சிறிய நகரங்களுக்கான முன்னெடுப்பு, ஒசூர் மண்டலப் பொருளாதார மற்றும் இடஞ்சார்ந்த மேம்பாடு குறித்த கையேட்டை வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில்
நிதி ஆயாக் அலுவலர்கள்,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
திட்ட இயக்குநர்
திருமதி.உமாமகேஸ்வரி
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்
உடனிருந்தனர்.
--------------------------------------.