World Skills 2026
போட்டியில் விருது
கலெக்டர் பாராட்டு
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்
முகாம் அலுவலகத்தில்,
சீனா, ஷாங்காயில் நடைபெற்ற
சர்வதேச திறன் போட்டியில்
அறிவுசார் பாதுகாப்புத் தொழில்நுட்பம்
(Intelligent Security Technology)
திறன் பிரிவில்
Medals for Excellence விருதினை
பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டம்,
வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம்,
நாச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த
செல்வன் K.B.ராகுல்
அவர்களுக்கு
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் இன்று (30.09.2026) வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி. செப். 30. –
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள்தெரிவித்ததாவது
திறன்களின் ஒலிம்பிக்ஸ்
(Olympics of Skills)
என்று அழைக்கப்படும்
உலகத் திறன் போட்டிகள்
(WorldSkills Competition),
தொழில் மற்றும் தொழில்நுட்பத்
திறன் பிரிவுகளில்
உலகின் உயரிய சர்வதேசப் போட்டியாக கருதப்படுகின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை
நடைபெறும் இப்போட்டிகள்,
உலகெங்கிலும் உள்ள திறன்மிக்க இளைஞர்கள் தங்களது திறமைகளைச்
சர்வதேச அளவில் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகின்றன.
22.09.2026 முதல் 27.09.2026 வரை
ஷாங்காயில் நடைபெற்ற
World Skills 2026 போட்டியில்
கிருஷ்ணகிரி மாவட்டம்,
வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம்,
நாச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த
செல்வன் K.B.ராகுல் BE(EEE),
Intelligent Security Technology
என்ற திறன் பிரிவில் கலந்து கொண்டு
Medals for Excellence விருதினை
வென்று சாதனை புரிந்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் -2026
கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற
இந்தியா அளவிலான திறன் போட்டியில்
முதலிடம் பெற்றுள்ளார்.
பதக்கம் வென்ற ராகுலுக்கு
வாழ்த்து மற்றும் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஷாங்காயில் நடைபெற்ற
இப்போட்டியில் இந்திய அணி மொத்தம்
6 வெள்ளிப் பதக்கங்களையும்
20 Medals for Excellence
விருதுகளையும் வென்றுள்ளது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு
கழகம் (TNSDC)
வாயிலாக மாவட்ட மற்றும் மாநில அளவிலிருந்து திறமையான போட்டியாளர்களை கண்டறிந்து,
அவர்களை தென் மண்டல,
தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளுக்கு தயார்ப்படுத்தும்
தமிழ்நாட்டின் தொடர் முயற்சிகள் இச்சாதனைகளின் மூலம் வெளிப்படுகின்றன.
எதிர்வரும் காலங்களில் இதுபோன்று நடைபெறவுள்ள திறன் போட்டிகளில்
இளைஞர்கள் அதிகளவில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை உலக அரங்கில் வெளிப்படுத்த வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில்,
மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநர்
திரு.பன்னீர்செல்வம்.
மாவட்ட திறனக திறன் அலுவலர்
திரு.சுந்தரம்.
மற்றும் மாணவரின் பெற்றோர் உடனிருந்தனர்.
--------------------------------------------.