வள்ளலாரின் 203 -வது
அவதார திருநாள் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஒசூர் மாநகராட்சியில் உள்ள
வள்ளலாரின் விவேகம் அறக்கட்டளை சார்பில்
வள்ளலாரின் 203 -வது
அவதார திருநாள் விழா
ஓசூர் ஆராதனா அறக்கட்டளை நிறுவனர்
சிறந்த
சமூக சேவகர் ராதா
அவர்களுக்கு
ஜீவகாருண்ய விருது வழங்கி கவுரவிப்பு
தவத்திரு குமரகுருபர
சுவாமிகள்
பங்கேற்பு
ஒசூர், அக். 6:
ஒசூர் வள்ளலாரின் விவேகம்
அறக்கட்டளை சார்பில்
6-வது ஆண்டு - வள்ளலாரின் 203- வது
அவதார திருநாளில்
சமூக சேவகர்களுக்கு
ஜீவகாருண்ய விருதுகள்
வழங்கும் விழா
மீரா மஹாலில் ஞாயிற்றுக்கிழமை
நடைபெற்றது.
அக்டோபர் 5 ம் தேதி
வள்ளலாரின் பிறந்தநாள்
அனைத்து ஆன்மீக அன்பர்களாலும்
கொண்டாடப்பட்டு வருகின்றது.
19-ஆம் நூற்றாண்டில் தோன்றி
மனித குலத்திற்கு அன்பைப் போதித்த
வடலூர் வள்ளல் பெருமான்,
சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவிய,
அருட்பிரகாச வள்ளலாரின் பிறந்த நாள்,
அவரது 203 வது விழாவாக
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில்
கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில்
கோவை சரவணம்பட்டி சிரவை ஆதீனம்
கெளமார மடாலயம்
குரு மகா சன்னிதானம்
தவத்திரு குமரகுருபர சுவாமிகள்,
பொள்ளாச்சி தத்துவ ஞான சபை ஆச்சாரியார்
பூஜ்ஜியஸ்ரீ வேதாந்த சுவாமிகள்
மற்றும்
மதுரை ஆதீனம் ஸ்ரீமத் விஷவலிங்கத்
தம்பிரான் சுவாமிகள்
ஆகியோர் பங்கேற்று
குத்துவிளக்கேற்றி வைத்து
விழாவை தொடங்கி வைத்தனர்.
சிறப்புரை
விழாவில் சிறப்புரையாற்றிய
கோவை சரவணம்பட்டி சிரவை ஆதீனம் கெளமார மடாலயம் குரு மகா சன்னிதானம்
தவத்திரு குமரகுருபர சுவாமிகள்,
வடலூர் வள்ளலாம் இராமலிங்க அடிகளாரின் பெருமைகள் மற்றும் அவரது உபதேசங்கள் குறித்து விரிவாகப் உரையாற்றினர்.
குறிப்பாக, அனைத்து உயிர்களிடமும் பாகுபாடின்றி அன்பு செலுத்த வேண்டும். ஜீவகாருண்ய நெறியைக் கடைப்பிடிப்பதன் மூலம், மனித குலம் நிரந்தர ஆனந்தத்தைப் பெற்று உய்வடைய முடியும் என்பதை வள்ளலாரின் படைப்புகளில் இருந்து மேற்கோள் காட்டி வெகுவாக எடுத்துரைத்தார்.
ஜீவகாருண்ய விருது
இந்த விழாவில்
ஓசூர் ஆராதனா அறக்கட்டளை நிறுவனர்
சமூக சேவகர் ராதா
அவர்களின் தன்னலமற்ற சேவையைப்
போற்றும் விதமாக,
தவத்திரு குமரகுருபர சுவாமிகள்
மற்றும் துறவியர்களின் திருக்கரங்களால்
ஜீவகாருண்ய விருது
வழங்கி கவுரவிக்கப்பட்டது.
முதலமைச்சரிடம்
சிறந்த சமூக சேவகர் விருது
சமூக சேவகர் ராதா
அவர்களின்
பெண்களுக்கான
சிறப்பான சமூக வேவையை பாராட்டி
சென்னையில் நடந்த 80-வது சுதந்திர தினவிழாவில்
முதலமைச்சரிடம்
சிறந்த சமூக சேவகர் விருது பெற்றுள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது.
---------------------------------------------.