பாகு மீன் வளர்ப்பு
மூன்று நாட்கள்
இலவச பயிற்சி
கிருஷ்ணகிரி பாரூர் வளங்குன்றா நீருயிரி
வளர்ப்பு மையத்தில்
பாகு மீன் வளர்ப்பு முறைகள் குறித்து
மூன்று நாட்கள்
இலவச பயிற்சி
(23-09-2026 முதல்
25-09-2026 வரை)
கிருஷ்ணகிரி. செப். 22. –
"பாகு மீன் இனப்பெருக்கம் மற்றும்
வளர்ப்பு முறைகள்"
இலவச பயிற்சி
கிருஷ்ணகிரி புங்கம்பட்டி பாரூரில் அமைந்துள்ள
தமிழ் நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா
மீன்வளப் பல்கலைக்கழகத்தின்
வளங்குன்றா நீருயிரி
வளர்ப்பு இயக்ககத்தின் கீழ் இயங்கும்
கிருஷ்ணகிரி பாரூர் வளங்குன்றா
நீருயிரி வளர்ப்பு மையத்தில்
"பாகு மீன் இனப்பெருக்கம் மற்றும்
வளர்ப்பு முறைகள்" குறித்து
மூன்று நாள் (23-09-2026 முதல் 25-09-2026)
இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி பாரூர்
வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மைய
உதவி பேராசிரியர்
திரு. சோமசுந்தரம்
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நமது நாட்டின் மீன் உற்பத்தியை
பெருக்கும் நோக்கில்
மாநில அரசின் நிதி உதவியின் கீழ்
பல்வேறு விழிப்புணர்வு முகாம்களும்
பயிற்சி வகுப்புகளும்
மீன் வளர்ப்பில் ஆர்வம் உள்ளோருக்கும்
மற்றும்
மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கும்
நாடு முழுவதும் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக
கிருஷ்ணகிரி புங்கம்பட்டி
பாரூரில் அமைந்துள்ள
தமிழ் நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா
மீன்வளப் பல்கலைக்கழகத்தின்
வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு
இயக்ககத்தின் கீழ் இயங்கும்
கிருஷ்ணகிரி பாரூர் வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையத்தில்
"பாகு மீன் இனப்பெருக்கம் மற்றும்
வளர்ப்பு முறைகள்"
குறித்து மூன்று நாள்
(23-09-2026 முதல் 25-09-2026)
இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இப்பயிற்சியில்
குளம் அமைத்தல்,
குளம் பராமரிப்பு,
பாகு மீன் விதை உற்பத்தி,
பாகு மீன் வளர்ப்பு,
தீவன தயாரிப்பு
மற்றும் மேலாண்மை,
நவீன ஒருங்கிணைந்த
மீன் வளர்ப்பு முறைகள்,
மீன் வளர்ப்பில்
அரசின் நிதி உதவி திட்டங்கள்
மற்றும்
பல்வேறு செயல்முறை விளக்கங்களும் அளிக்கப்படவுள்ளன.
மேலும் பயிற்சியின் போது
பயிற்சியாளர்கள்
தற்போது வெற்றிகரமாக மீன் வளர்த்துக் கொண்டிருக்கும்
மீன் பண்னையாளர்களின் பண்னைகளுக்கும்
அழைத்து செல்லபடவுள்ளனர்.
எனவே விருப்பமுள்ள பயனாளிகள் இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களுடைய ஆதார் அட்டையினை அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள
தொலைபேசி எண்கள்
8179462833.
8122208148.
9092086570.
8675858384.
ஆகிய எண்களை தொடர்புகொண்டு
பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-----------------------------------------------------.