கிருஷ்ணகிரி மாவட்ட
அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்
செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சியில்
கற்றுக்கொண்டவற்றைத்
தத்தம் துறைகளின் அன்றாடப்பணிகளில்
செயல்படுத்தி, நிர்வாகத்திறனை
மேம்படுத்த வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார், இ.ஆ.ப.,
அவர்கள் தகவல்
கிருஷ்ணகிரி. அக். 15. –
"செயற்கை நுண்ணறிவு (AI)
இரண்டு நாள் பயிற்சி”
கிருஷ்ணகிரி மாவட்டம்,
போலுப்பள்ளி, அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
"செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும்
அன்றாட அலுவலக நிர்வாகத்தில்
அதன் திறம்பட்ட பயன்பாடு"
குறித்த அரசு அலுவலர்களுக்கான
இரண்டு நாள் பயிற்சியை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார், இ.ஆ.ப.,
அவர்கள் இன்று (15.10.2026) துவக்கி வைத்து உரையாற்றினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்ததாவது:
"செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும்
அன்றாட அலுவலக நிர்வாகத்தில்
அதன் திறம்பட்ட பயன்பாடு"
குறித்து அரசு அலுவலர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி (15.10.2026 மற்றும் 16.10.2026) இன்று தொடங்கப்பட்டுள்ளது.
தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப
அரசு நிர்வாகமும் தன்னை மேம்படுத்திக் கொள்ளவேண்டியது அவசியம்.
செயற்கை நுண்ணறிவைப்
பயன்படுத்துவதன் மூலம்
கடிதங்கள் மற்றும்
அறிக்கைகள் தயாரித்தல்,
தரவுகளை ஆய்வு செய்தல்,
மொழிபெயர்ப்பு,
கூட்டக் குறிப்புகள் எழுதுதல்
போன்ற அன்றாடப்பணிகளை விரைவாகவும் துல்லியமாகவும் மேற்கொள்ள முடியும்.
இதன் மூலம் மிச்சமாகும் நேரத்தைப் பொதுமக்களுக்கான சேவைகளை விரைவுபடுத்தவும்,
மக்களின் குறைகளுக்குத் துரிதமாகத் தீர்வு காணவும் பயன்படுத்த வேண்டும்.
அதே நேரத்தில், அரசின் ரகசியத் தகவல்கள் மற்றும் பொதுமக்களின் தனிப்பட்ட விவரங்களைச் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளில் பதிவேற்றம் செய்யாமல்,
தகவல் பாதுகாப்பை உறுதிசெய்து
பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்.
பயிற்சியில் கற்றுக்கொண்டவற்றைத்
தத்தம் துறைகளின் அன்றாடப்பணிகளில்
செயல்படுத்தி, நிர்வாகத்திறனை
மேம்படுத்த வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார், இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
இப்பயிற்சியில் பதிவு செய்த
100 அரசு அலுவலர்கள் மற்றும
பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில்
மாவட்ட வருவாய் அலுவலர்
திருமதி.த.மஞ்சுளா,
தனித்துணை ஆட்சியர்
(சமூக பாதுகாப்பு திட்டம்)
திருமதி.அபிநயா,
மாவட்ட வழங்கல் அலுவலர்
திருமதி.கீதா ராணி,
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்
நல அலுவலர்
திரு.அமீர்பாஷா,
உதவி இயக்குநர்(ஆயம்)
திரு.பழனி,
உதவி ஆட்சியர் (பயிற்சி)
திரு.சாய் சைதன்யா ஜாதாவ்
இ.ஆ.ப.,
வட்டாட்சியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
-----------------------------------------.