விவசாயிகள்
குறை தீர்க்கும்
நாள் கூட்டம்
மாவட்ட வருவாய் அலுவலர்
திருமதி.த.மஞ்சுளா
அவர்கள் தலைமையில்
நடைபெற்றது.
கிருஷ்ணகிரி. அக். 23. –
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்
அலுவலக கூட்டரங்கில்,
வேளாண்மைத்துறை சார்பாக,
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மாவட்ட வருவாய் அலுவலர்
திருமதி.த.மஞ்சுளா
அவர்கள் தலைமையில்
இன்று (23.10.2026) நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர்
அவர்கள் தெரிவித்தாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
விவசாயிகளின் குறைகளை நேரடியாக
கேட்டு அவற்றை நிவர்த்தி செய்ய ஏதுவாக
ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியர்
அலுவலக கூட்டரங்கில்
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் இன்று (23.10.2026) நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்
200 மனுக்கள் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில்,
விவசாயம் சார்ந்த பொதுப் பிரச்சனைகள்
குறித்து விவாதிக்கப்பட்டது.
தமிழ்நாடு கால்நடை அறிவியல்
பல்கலைக்கழக மருத்துவமனை
கல்லூரியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட
நச்சு அற்ற கால்நடை புறஒட்டுண்ணி மருந்து
நானோமெத்திகான் (Spray)
குறித்து வேளாண் அறிவியல் நிலைய
பேராசிரியர் அவர்களால்
விவசாமிகளுக்கு விளக்கிக் கூறப்பட்டது.
நடப்பு வருடம் 7,400 எக்டர் வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலக்கடலை மற்றும் துவரை பயிருக்கு வறட்சி நிவாரணம் வழங்க கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில் வறட்சி நிவாரணம் கோரி அரசிற்கு பரிந்துரை செய்து வறட்சி நிவாரணம் பெற்று வழங்கப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் (பொ) அவர்களால் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, உரம் மற்றும் பூச்சி மருத்து கடைகளை திடீர் ஆய்வு மேற்கொண்டு உரம் மற்றும் பூச்சி மருந்து விநியோகத்தை முறையாக கண்காணிக்கவும்,
கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் போர்க்கால அடிப்படையில் பொதுப்பணித்துறை கால்வாய்களை தூர்வாரி பாலேகுறி மற்றும் சந்தூர் ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கவும்,
கோட்ட அளவில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை மீண்டும் நடத்தவும்,
கர்நாடகா மாநிலத்திலிருந்து வரும் கழிவுநீர் தென்பெண்ணை ஆற்றில் கலப்பதால் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் கழிவுநீரில் உள்ள நச்சுத்தன்மையை பரிசோதித்து அறிக்கை அளிக்கவும்,
வேளாண்மை பொறியியல் துறை மூலம் வழங்கப்படும் இயந்திரங்கள் விவசாயிகள் கோரும் நிறுவனங்களிலிருந்து தரமான இயந்திரங்கள் பெற்று வழங்கவும்,
வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கவும்,
பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு
உரிய இழப்பீடு வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும்,
KRP அணைக்கட்டிற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மாற்று நிலத்திற்கு பட்டா வழங்கவும்
விவசாயிகளால் கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும், இக்கூட்டத்தில்
விவசாயிகளால் தடுப்பணை,
நில ஆக்கிரமிப்பு,
மின் இணைப்பு,
நீர்நிலை பராமரிப்பு,
வங்கி கடன்,
வனத்துறை,
கால்வாய் ஆக்கிரமிப்பு,
ஏரிகள் தூர்வாருதல்,
வண்டல் மண் அள்ளுதல்,
தார் சாலை சீரமைத்தல்,
ஏரிகளுக்கு நீர் வழங்குதல்,
கூட்டுறவு கடன்,
கால்நடை மருத்துவமனை அமைத்தல்,
கோவில் நில ஆக்கிரமிப்பு,
குடிநீரி விநியோகம்,
வேளாண்மைத்துறை
மற்றும் சகோதரத்துறைகளின் திட்டங்கள் குறித்து கோரிக்கை வைக்கப்பட்டு உரிய துறை அலுவலர்களால் பதில் வழங்கப்பட்டது.
விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என
மாவட்ட வருவாய் அலுவலர்
திருமதி.த.மஞ்சுளா
அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில்,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
திட்ட இயக்குநர்
திருமதி.உமாமகேஸ்வரி,
இணை இயக்குநர்கள் (பொ)
திருமதி.உமா
(வேளாண்மைத்துறை),
திருமதி.குணவதி
(தோட்டக்கலைத்துறை),
கூட்டுறவு சங்கங்களின்
இணைப்பதிவாளர்
திரு.நடராஜன்,
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியார் (வேளாண்மை)
திருமதி.பா.ஏஞ்சலின் பொன்ராணி,
உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)
திரு.தமிழ்செல்வன்,
இந்தியன் வங்கி
முன்னோடி வங்கி மேலாளர்
திரு.சசிகுமார்,
வேளாண் அறிவியல் மைய தலைவர்
முனைவர்.சுந்தர்ராஜ்,
கால்நடை பராமரிப்புத்துறை
உதவி இயக்குநர்
மரு.மகேந்திரன்
மற்றும் வருவாய்துறை, ஊரக வளர்ச்சி துறை, நீர்வளத்துறை, சுகாதாரத்துறை, வனத்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.
---------------------------------------------.