கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் வட்டம்
பேரண்டபள்ளி எஸ்.டி.ஆர். சாலையில்
கண்டெய்னர் லாரி மோதி
காயமடந்த இருசக்கர வாகனத்தில் வந்த
இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தைக்கு
உடனடியாக முதலுதவியாக
தண்ணீர் வழங்கி
ஓசூர் அரசு மருத்துவமனைக்கு
சிகிச்சை அளிக்க அனுப்பி வைத்த
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு. ச. தினேஷ்குமார் இ.ஆ.ப.
அவர்களுக்கு
பொதுமக்கள் பாராட்டு.
ஓசூர். அக். 14. –
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டம்
பேரண்டபள்ளி எஸ்.டி.ஆர். ஆர் சாலையில்
அக்டோபர் 14-ம் தேதியன்று
கண்டெய்னர் லாரி
இருசக்கர வாகனத்தின் மீது மோதி
விபத்து ஏற்பட்டது.
அப்போது அந்த வழியாக சென்ற
மாவட்ட ஆட்சித் தலைவர்
திரு. ச. தினேஷ்குமார்.இஆப.
அவர்கள் உடனடியாக
தனது வாகனத்தை நிறுத்தி,
இருசக்கர வாகனத்தில் வந்து காயமடைந்த
இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தைக்கு
முதலுதவியாக தண்ணீர் வழங்கினார்.
மேலும் அவர்களை ஓசூர் வட்டாட்சியர் வாகனத்தில் அரசு மருத்துவமனைக்கு
கொண்டு சென்று சிகிச்சை அளிக்க
அனுப்பி வைத்தார்.
மேலும் விபத்து ஏற்பட காரணமான
கண்டெய்னர் லாரியின் ஓட்டுனரை
தனது பாதுகாவலர் உடன்
மற்றொரு வாகனத்தில் அனுப்பி
காவல் நிலையத்தில் ஒப்படைத்து
வழக்கு பதிவு செய்து விசாரணை
செய்ய உத்தரவிட்டார்.
மனிதநேயமிக்க
கலெக்டருக்கு
பாராட்டு
விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு
உடனடியாக சிகிச்சை அளிக்க
உதவி புரிந்த மாவட்ட ஆட்சித்தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
-----------------------------------------.