பிரதம மந்திரியின்
சூரிய வீடு இலவச மின்சார திட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட
பொதுமக்கள் அனைவரும்
தங்கள் வீடுகளில் சோலார் அமைக்க
முன்வரவேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார், இ.ஆ.ப.,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. அக். 14. –
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஒசூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில்,
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்
பகிர்மான கழகம் சார்பாக,
பிரதம மந்திரியின்
சூரிய வீடு இலவச மின்சார திட்ட
விழிப்புணர்வு முகாமை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் இன்று (14.10.2026)
துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்ததவாது:
தமிழ்நாட்டில் அக்டோபர் மாதத்தில் உச்சபட்ச மின்தேவை 21,000 மெகாவாட்டை எட்டியுள்ள நிலையில், பருவமழை மாற்றங்களால் சந்தையிலிருந்து கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
இதற்கு நிரந்தரத் தீர்வாகவும், நாட்டின் நிலக்கரி பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் மாசைக் குறைக்கவும் சூரிய மின்சக்தி உற்பத்தியை அரசு தீவிரமாக ஊக்குவித்து வருகிறது.
மத்திய அரசு நாடு முழுவதும் இத்திட்டத்திற்காக ரூ.75,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
ஏற்கனவே மத்திய அரசு மானியம் வழங்கப்பட்ட நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாநில அரசும் மானியம் வழங்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 2677 எண்ணிக்கையும், அதில் ஒசூர் மின் கோட்டத்திற்கு 1500 எண்ணிக்கைகள் இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில்
1 கிலோவாட் திறன் கொண்ட
சூரிய தகடுகளுக்கு
மத்திய அரசு மானியம் ரூ.30,000/-மும்,
மாநில அரசு மானியம் ரூ.5,000/-
என மொத்தம் ரூ.35,000/-மானியமும்,
2 கிலோவாட் திறன் கொண்ட
சூரிய தகடுகளுக்கு
மத்திய அரசு மானியம் ரூ.60,000/-
மாநில அரசு மானியம் ரூ.10,000/-
என மொத்த ரூ.70,000/- மானியமும்,
3 கிலோவாட் அதற்கு மேல்
10 கிலோ வாட் வரை
மத்திய அரசு மானியம் ரூ.78,000/-
மாநில அரசு மானியம் ரூ.22,000/-
என மொத்த ரூ.1,00,000/- மானியம்
வழங்கப்பட்டு வருகிறது.
1 லட்சம் வீடுகளில்
மேற்கூரை சோலார்
தமிழகத்தில் வரும் 2027 மார்ச் மாதத்திற்குள்
1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சோலார்
அமைக்கும் இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த இலக்கைத் தாண்டினாலும்
கூடுதல் பயனாளிகளுக்கும் இம்மானியம் தடையின்றி வழங்கப்படும் என
மாண்புமிகு மின்சாரத் துறை அமைச்சர்
அவர்கள் உறுதியளித்துள்ளார்.
மேலும்,
சுமார் ரூ.2.10 லட்சம் முதல் ரூ.2.20 லட்சம் மதிப்பிலான 3 கிலோவாட் சோலார் அமைப்பிற்கு, ரூ.1 லட்சம் அரசு மானியம் போக எஞ்சிய தொகைக்கு வங்கிகள் 6 சதவிகிதம் குறைந்த வட்டியில் 10 ஆண்டு தவணைக் கடன் வழங்குகின்றன.
இதன் மாதாந்திர இ.எம்.ஐ (EMI)
சுமார் ரூ.1,200 மட்டுமே.
3 கிலோவாட் மூலம் மாதத்திற்கு
360 முதல் 450 யூனிட் மின்சாரம்
உற்பத்தியாகும் என்பதால்,
வீட்டுத் தேவை போக மீதமுள்ள
மின்சாரத்தை மின்வாரியக்
கட்டமைப்புக்கு வழங்கி
வருவாய் ஈட்டலாம்.
வழக்கமாக ரூ.4,000 வரை மின்கட்டணம்
செலுத்தும் குடும்பங்களுக்கு,
மூன்று ஆண்டுகளிலேயே
இந்த முதலீட்டுத் தொகை
முழுமையாகத் திரும்பக் கிடைத்துவிடும்
சூரிய ஒளி ஆற்றலில் (Solar Irradiance)
திருநெல்வேலி,
கரூர்
மாவட்டத்திற்க்கு அடுத்தபடியாக
தமிழகத்திலேயே
கிருஷ்ணகிரி மாவட்டம்
3-வது இடத்தில் உள்ளது.
மாவட்டத்தில் ஏற்கனவே 26 மெகாவாட்
அளவிலான சோலார் பண்ணைகள்
இயங்கி வருகின்றன.
மேலும், காவேரிப்பட்டினம் அருகே
மாதிரி சோலார் கிராமம் மற்றும்
200 ஏக்கரில் சோலார் பூங்கா
அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள்
ஆராயப்பட்டு வருகின்றன.
விவசாயிகள்
"பிரதம மந்திரி கிசான் உர்ஜா
சுரக்ஷா ஏவம் உத்தான் மகாவியன்"
(PM-KUSUM) திட்டத்தின் கீழ்
தங்களது நிலங்களில் 250 கிலோவாட் வரை சோலார் அமைத்து பயன்பெறலாம்.
எதிர்கால பசுமை மாவட்டத்திற்கும்
பூஜ்ஜிய மின்கட்டணத்திற்கும்
வழிவகுக்கும் இத்திட்டத்தில்
கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள்
பெருமளவில் பங்கேற்று
மாநிலத்திற்கே முன்மாதிரியாகத்
திகழ வேண்டும்.
எனவே கிருஷ்ணகிரி மாவட்ட
பொதுமக்கள் அனைவரும்
தங்கள் வீடுகளில் சோலார்
அமைக்க முன்வரவேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார், இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து,
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் 3 பயனாளிகளுக்கு சோலார் மின் மீட்டர்களை வழங்கினார்.
இம்முகாமில்
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்,
மேற்பார்வை பொறியாளர்
திரு.கு.கண்ணன்,
இந்தியன் வங்கி
முன்னோடி வங்கி மேலாளர்
திரு.சசிகுமார்,
செயற்பொறியாளர்
திரு.சி.டி.செந்தில்ராஜ்,
உதவி செயற்பொறியாளர்கள்
திரு.கே.விமல்,
திரு.இரா.சேதுராமன்,
திரு.எஸ்.மணிவேல்,
திருமதி.எம்.டி.நளினி,
உதவி பொறியாளர்
திருமதி.பவித்ரா.
மற்றும் சோலார் விற்பனையாளர்கள், நுகர்வோர்கள், பொதுமக்கள் மற்றும்
துறை சார்ந்த அலுவலர்கள்
கலந்துக்கொண்டனர்.
-----------------------------------------------.