தமிழ்நாடு வனத்துறை
கிருஷ்ணகிரி வனக்கோட்டம்
தேன்கனிக்கோட்டை வனச்சரகம் சார்பில்
நாகமங்கலம் ஏரிக்கரையில்
1000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது
நாகமங்கலம் ஊராட்சி ஒன்றிய
தொடக்கப்பள்ளி மாணவர்களும்,
ஊராட்சி மன்ற பணியாளர்களும்,
வனத்துறை அலுவலர்களும் பங்கேற்பு
தேன்கனிக்கோட்டை. அக். 10. –
தேன்கனிக்கோட்டை வனச்சரகம்
1000 பனை விதைகள் நடவு
தமிழ்நாடு வனத்துறை
கிருஷ்ணகிரி வனக்கோட்டம்
தேன்கனிக்கோட்டை வனச்சரகம் சார்பில்
நாகமங்கலம் ஏரிக்கரையில்
பனை விதைகள் நடவு செய்யும் பணி
(9. 10.2026) அன்று முற்பகல் 11 மணி அளவில் நடைபெற்றது.
இந்த நடவுப்பணியில்...
நாகமங்கலம் ஊராட்சி ஒன்றிய
தொடக்கப்பள்ளி மாணவர்களும்,
ஊராட்சி மன்றத்தில் பணியாற்றக்கூடிய பணியாளர்களும்,
வனத்துறை அலுவலர்களும்
இணைந்து நமது மூத்த மரமான
பனை மரத்தினுடைய விதைகளை
ஆயிரக் கணக்கில் சேகரித்துக்
கொண்டு வந்து நடவு செய்தனர்.
அதுமட்டுமல்லாமல் ....
பனை மரத்தின் பயன்கள்...
மாணவர்களிடம் பனை மரத்தின்
முக்கியத்துவத்தை குறித்தும்,
பழங்காலத்தில் நமக்கு பனைமரம்
வழங்கிய பெரும் உதவிகளையும்,
அதாவது... பனை மரங்களின் மூலமாக
நமக்கு கொடையாக கிடைக்கப்பெற்ற...
காய்களை,
கனிகளை,
கிழங்குகளை,
விதைகளை,
ஓலைகளை,
இன்னும் சொல்லப்போனால்
ஓலைச் சுவடிகளின் வழியாக நமது அறிவுச் செல்வங்களை கடத்தி வந்த
சிறந்த மரமாக பனைமரம் திகழ்ந்தது
என மாணவச்செல்வங்களுக்கிடையே எடுத்துரைக்கப்பட்டது.
1000 பனை விதைகள் நடவு
இன்றைக்கு(9-10-2026)...
இந்த இளைய தலைமுறையினர்
அந்தப் பெரும் உண்மையை
அறியும் வகையில்
ஆயிரம் பனை விதைகளை
கொண்டு வந்து மாணவர்களும்,
ஊர் நலம் விரும்பிகளும்,
நாகமங்கலம் ஏரிக்கரையில்
நடவு செய்தனர்.
இந்நிகழ்ச்சியில்...
தேன்கனிக்கோட்டை
வனச்சரக அலுவலர்,
வனவர்கள்,
நாகமங்கலம் ஊராட்சி
தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர்,
ஆசிரிய பெருமக்கள்,
மாணவச் செல்வங்கள் கலந்துகொண்டு
பனை விதைகளை நட்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியானது
வனத்துறை அலுவலர்
தி. இளஞ்செழியன்
அவர்களின் வரவேற்பு உரையுடன்
தொடங்கி வைக்கப்பட்டு,
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
தலைமை ஆசிரியர்
ஆசீர்வாதம்
அவர்களின் நன்றி உரையுடன் இனிதே முடிவடைந்தது.
---------------------------------------------.