கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
டெங்கு,
எலிக்காய்ச்சல்,
உண்ணி காய்ச்சல்
தடுப்பு பணிகள் குறித்த
2 வார கால
மாபெரும் தூய்மைப் பணி பிரச்சாரத்தில்
அனைத்து தரப்பினரும்
ஒத்துழைப்பு வழங்குமாறு
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ்குமார் இஆப,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. செப். 22. –
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்
அலுவலக கூட்டரங்கில்,
மருத்துவம்
மற்றும்
மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக
டெங்கு,
எலிக்காய்ச்சல்,
உண்ணி காய்ச்சல்
தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தலைமையில்
காணொளி காட்சி வாயிலாக
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்,
பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோருடன் இன்று(2209.2026) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
டெங்கு,
எலிக்காய்ச்சல்
(லெப்டோஸ்பைரோசிஸ்),
உண்ணி காய்ச்சல்
உள்ளிட்ட கொசு / எலி மூலம்
பரவும் நோய்களை கட்டுப்படுத்த
2 வார கால மாபெரும் தூய்மைப் (Mass Cleaning Campaign) தொடங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
இந்த ஆண்டு (2026) இதுவரை
320 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல்,
139 நபர்களுக்கு எலிக்காய்ச்சல் / லெப்டோஸ்பைரோசிஸ் மற்றும்
85 நபர்களுக்கு உண்ணி காய்ச்சலால்
பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும்,
எலி/ கொசு மூலம் பரவும் நோய்களின்
தாக்கத்தைக் கருத்தில் கொண்டு,
இவற்றை உடனடியாகக் கட்டுப்படுத்தும் நோக்கில் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மாவட்டம் முழுவதும் 2 வார கால தீவிர தூய்மைப் பணி பிரச்சாரத்தை (Mass Cleaning Campaign) ஆரம்பித்துள்ளது.
தேங்கி நிற்கும் மழைநீர்,
அடர்ந்த புதர்கள்,
கழிவுகள் மற்றும்
பராமரிக்கப்படாத சுற்றுப்புறச் சூழல்
ஆகியவை
கொசு இனப்பெருக்கத்திற்கும்
எலி மூலம் பரவும் நோய்களின் வளர்ச்சிக்கும்
முக்கிய காரணமாக அமைகிறது.
இதனை தடுக்கும் விதமாக,
மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே,
மாவட்டம் முழுவதும் உள்ள
அரசு கட்டிடங்கள்,
பள்ளிகள்,
கல்லூரிகள்,
அங்கன்வாடி மையங்கள்,
விடுதிகள்
மற்றும்
தொழிற்சாலைகள்
என 7,094 பொது இடங்களில்
கட்டமைப்பு ரீதியான, ஒவ்வொரு கட்டிடத்திலும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும்.
பிரச்சாரத்தின் முக்கிய பணிகள்:
கூரை / மொட்டை மாடி தூய்மைப்படுத்துதல்
குப்பைகள் தேங்கிய நீர் அகற்றுதல்,
மேல்தொட்டிகள் சுத்தம் செய்து
குளோரினேற்றம் செய்தல் -
குடிநீர் பாதுகாப்பு உறுதி,
புதர்கள் மற்றும் கொசு /
எலி வளைகளை அகற்றி மூடுதல் பணிகள் மேற்கொள்ளப்படும்.
ஒவ்வொரு கட்டிடத்திற்கும் உரிய பொறுப்பு அலுவலர், பொறுப்பாளர்கள் பொறுப்பேற்று, சுகாதாரத் துறை பணியாளர்களுடன் (BHS / HI / DBC) இணைந்து தூய்மைப் பணியை மேற்பார்வையிடுவார்கள்.
தனியார் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் அவர்களின் வளாகங்களில் சொந்த குழுவைக் கொண்டு தூய்மைப் பணியை மேற்கொண்டு, புகைப்படச் சான்றுகளுடன் கூடிய அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட அளவிலான போர் அறை
(War Room) அமைப்பு
இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து மேற்பார்வையிட கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார அலுவலகத்தில் ஒரு மாவட்ட அளவிலான போர் அறை (War Room) ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த போர் அறை, மாவட்டம் முழுவதும் பதிவாகும் காய்ச்சல் அறிகுறி உள்ள நபர்களை தினசரி அடிப்படையில் கண்காணித்து, உடனுக்குடன் தொடர்ந்து ஆய்வு செய்து. களநிலை நடவடிக்கைகளை (field level activities) மேற்பார்வையிட்டு ஒருங்கிணைக்கும் பொறுப்பை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும்,
பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும்
வளாகங்களைச் சுற்றி
தண்ணீர் தேங்காதவாறு
பார்த்துக்கொள்ளவும்.
தவறாமல் கடைபிடிக்கவும்.
டெங்கு,
எலிக்காய்ச்சல்,
உண்ணி காய்ச்சல்
அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனை அல்லது சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்துகொள்ளவும் மாவட்ட நிர்வாகம் வலியுறுத்துகிறது.
இந்த 2 வார கால தீவிர தூய்மைப் பணி
பிரச்சாரத்தின் மூலம் கொசு இனப்பெருக்க
இடங்களை முற்றிலும் அகற்றி,
பாதுகாப்பான குடிநீர் வழங்கி
மாவட்ட மக்களின் ஆரோக்கியத்தைப்
பாதுகாக்க அனைத்து துறைகளும்
ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
அனைத்து தரப்பினரும்
இந்த பிரச்சாரத்தில்
முழு ஒத்துழைப்பு வழங்குமாறு
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில்,
ஓசூர் மாநகராட்சி ஆணையாளர்
திரு.முகம்மது ஷபீர் ஆலம். இ.ஆ.ப,
மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர்
திருமதி. உமாமகேஸ்வரி,
மாவட்ட சுகாதார அலுவலர்
மரு.ஜெகநாதன்,
மாநகர சுகாதார அலுவலர்
மரு.அஜிதா,
உதவி இயக்குநர்கள் (ஊராட்சிகள்)
திரு. வடிவேல்,
திரு.தமிழ்செல்வன்
மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பள்ளி கல்வித்துறை அலுவலர்கள். தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
-----------------------------------------------.