ஜோதி தமிழ்
செய்திகள்
இணையஇதழ்
மலர்-2-இதழ்கள் - 342
ஓசூரில் வள்ளலாரின்
203-வது பிறந்தநாள்
விழாவில் திரு.T.ஸ்ரீராஜேந்திரனுக்கு
ஜீவகாருண்ய விருது
வழங்கி கவுரவிப்பு
செய்தி ஆசிரியர் ஜோதி ரவிசுகுமார்,M.A.
ஜீவகாருண்ய விருது
வழங்கி கவுரவிப்பு
செய்தி ஆசிரியர் ஜோதி ரவிசுகுமார்,M.A.
வள்ளலாரின் 203 -வது
அவதார திருநாள் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஒசூர் மாநகராட்சியில் உள்ள
வள்ளலாரின் விவேகம் அறக்கட்டளை
சார்பில்
தொடர்ந்து 6வது ஆண்டாக
வள்ளலாரின் 203 வது அவதார திருநாள் விழா
இப்புனித விழாவில்
தன்னலமற்ற சேவை புரிந்தமைக்காக
திரு.T.ஸ்ரீராஜேந்திரன்
அவர்களுக்கு
ஜீவகாருண்ய விருது
வழங்கி கவுரவிப்பு.
ஓசூர். அக். 05. -
ஒசூர் வள்ளலாரின் விவேகம் அறக்கட்டளை
சார்பில் தொடர்ந்து 6வது ஆண்டாக
வள்ளலாரின் 203 வது அவதார திருநாளில்
பல துறைகளில் சாதனைப்படைத்து வரும்
சமூக சேவகர்களுக்கு
ஜீவகாருண்ய விருதுகள் வழங்கும் விழா
மீரா மஹாலில் ஞாயிற்றுக்கிழமை
04.10.2026- ம் தேதி அன்று நடைபெற்றது.
வள்ளலார் எல்லா உயிர்களிடத்திலும்
மகிழ்ச்சி, கருணை மற்றும்
நல்வாழ்வு தழைத்தோங்க
கனவு காண்பது போல...
ஸ்ரீராஜேந்திரன் அவர்களும் எளிமையாக
ஓர் அறிவு முதல் ஆறறிவு ஜீவன்களுக்கு
உதவிபுரிந்து வருகிறார்.
அதாவது...
செடி, கொடி, மரக்கன்றுகள் நடுதல்,
ஊர்வன, நடப்பன,
பறப்பன உயிர்களுக்கு
உணவளிப்பது மட்டுமின்றி
சமூதாய நலம் காக்கவும்,
மூலிகை பாரம்பரியச்சிந்தனை,
உடல்நலம் காக்க,
உயிர்நலம் மேலோங்க,
மனவளம் பெற வழிவகை செய்வது
ஆகிய நற்பணிகளை
தொடர்ந்து செய்து வருவதுடன்
ஒசூரில்
வாழ்க வளமுடன் பயிற்சி மையம்,
பிரம்ம மலையில் பிரம்ம தேவர் வழிபாடு,
மும்மூர்த்தி கிரிவலம்,
கலிக்கம் (மூலிகை வைத்தியம்)
நடப்பது என்றால்
இவரே முதன்மையானவர்.
மகான்கள் போல எளிமையாக,
விளம்பரம் இல்லாமல்
சேவைப் புரிந்து வருவதால்
ஸ்ரீராஜேந்திரன் அவர்களின்
தன்னலமற்ற சேவையை பாராட்டி
பல சமூகநல அறக்கட்டளைகள்
விருதுகள் அளித்து கவுரவித்து
பாராட்டியும் வருகின்றனர்.
வள்ளலாரின் 203 -வது
அவதார திருநாள் விழா
இவ்விழாவில்
வள்ளலாரின் விவேகம்
அறக்கட்டளை தலைவர்
திரு.M.P.ராஜேந்திரன்
அவர்கள் தலைமை வகித்தார்கள் .
கோவை
சிரவை ஆதினம் குருமகாசந்நிதானம்
குமரகுருபர சுவாமிகள்,
பொள்ளாட்சி
பூஜ்ய ஸ்ரீ யோகானந்தா
சுவாமிகள்
மதுரை
ஸ்ரீமத் விஷ்வலிங்கதம்பிரான்
சுவாமிகள்
அவர்களின் முன்னிலையில்
சமூக சேவையில் சிறப்பாகவும்
அர்ப்பணிப்பாலும் செயலாற்றி
தன்னலமற்ற சேவை
புரிந்தமைக்காக
திரு.T.ஸ்ரீராஜேந்திரனுக்கு
ஜீவ காருண்ய விருது
அளித்து கவுரவப்படுத்தப்பட்டது.
இந்த விழாவில்
திரு.K.A.மனோகரன்,
அகில இந்திய செயலாளர் INTUC,
தென்னிந்திய செங்குந்தர் சங்கம்,
திரு.KPK. செல்வராஜ் (திருப்பூர்).
மற்றும்
பல துறை வல்லுனர்கள்
சிவனடியார்கள்
கூட்டமைப்பு அன்பர்கள்,
சன்மார்க்க அன்பர்கள்
மற்றும் பொதுமக்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.
மேலும் இவ்விழாவில்
ஜோதி வழிபாடு அகவல் பாராயணனம்,
சொற்பொழிவுகள்
கலை நிகழ்ச்சிகள் மற்றும்
அன்னம் பாளிப்பு சிறப்பாக நடைபெற்றது.
--------------------------------------