பெருந்தலைவர்
காமராஜர்.
காலை உணவு திட்ட விரிவாக்கம்
தொடக்கம்
கிருஷ்ணகிரி. செப். 22. –
தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள் இன்று(22-9-2026)
சென்னை திருவான்மியூரில் உள்ள
காந்தி கிராமம் நடுநிலைப்பள்ளியில்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்
ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை
பயிலும் மாணவ, மாணவிகள்
பயன்பெறும் வகையில்
பெருந்தலைவர் காமராஜர்
காலை உணவு திட்ட விரிவாக்கத்தை
தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து
கிருஷ்ணகிரி அரசு பெண்கள்
மேல்நிலைப்பள்ளியில்
ஆறாம் வகுப்பு முதல்
எட்டாம் வகுப்பு வரை பயிலும்
மாணவிகளுக்கு
பெருந்தலைவர் காமராஜர்
காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தினை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு. ச. தினேஷ்குமார் இ.ஆ.ப.,
அவர்கள்
கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர்
திரு. பா.முகுந்தன்
அவர்கள் முன்னிலையில் (22-09-2026) தொடங்கி வைத்து பள்ளி மாணவிகளுக்கு காலை உணவு பரிமாறினார்.
---------------------------------------.